சமீபத்திய தொடரில் நாம்நமது உடலுக்கு தேவையான சத்துக்களையும், வைட்டமின்களையும் ,தாது உப்புகளை பற்றி நாம் பார்த்து வருகின்றோம்.
குறிப்பாக நாம் இந்த காலகட்டத்தில் பல வகையான மனிதனை வருத்தக்கூடிய கொடிய நோய்களை உயிர் பலிகளையும் நாம் சந்தித்து வருகின்றோம். இவை எதனால் ஏற்படுகிறது இவற்றை தவிர்க்க வழியே இல்லையா? இதை எவ்வாறு கடந்து செல்வது? மருத்துவர்களும் மருத்துவமனைகளும்பெருகிக்கொண்டே செல்கின்றன, இன்னும் பல பல வகையான மருந்துகள் என்று சந்தையில் வந்து விட்டன.
எனவே எல்லாவிதமான மருந்துகளை குறித்த அனைத்து விவரங்களும் பாமரர்களும் அறிந்து கொள்ளும் விதத்தில் தகவல் தொழில்நுட்பங்களும் அதிகரித்துக் கொண்டிருக்கின்ற இவ்வேளையில் நோய்களும் நோய்களின் தாக்கமும் ஏன் இன்னும் குறையவில்லை.
நாம் நோய்களை மையமாக வைத்தே இயங்குகிறோம் நோயைப் பற்றி நாம் படிக்கிறோம் நாம் நோயைத் தேடிச் செல்கின்றோம். நாம் நோய்க்குப் பெயர் வைக்கின்றோம். நாம் நோய்க்கு சிகிச்சை அளிக்க மருந்தியல் ரீதியாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளோம். மருத்துவப் பள்ளியில் நாம் மருந்தியல் பற்றி நம் பிள்ளைகளை படிக்க வைக்கின்றோம். ஒவ்வொரு மருந்தும் எவ்வாறு உடலால் உட் கிரகிக்கப்படுகிறது என்பதை கற்றுக் கொடுக்கிறோம்.
எப்பொழுது எவ்வாறு அது உடலில் இருந்து வெளியேற்றப்படுகிறது என்பதை பற்றியும் பரிசோதனைகளின் மூலமாக நாம் தெள்ளத் தெளிவாக அறிந்து வருகிறோம் நமது உடலில் ஏற்படக்கூடிய வேதியியல் மாற்றங்களை பரிசோதனைகளின் மூலமாகவும் அதிநவீன கருவிகளின் மூலமாகவும் அறிந்து கொள்கிறோம்.
எனவேதான் நாம் எந்த மருந்தை எடுத்துக் கொள்வதிலும் தயக்கம் காட்டுவதில்லை. அதன் பின் விளைவுகளை அறிந்திருந்தாலும் கூட அவற்றால் கிடைக்கும் பயன்களை சீர்தூக்கி பார்த்து கவனமுடன் நாம் பணியாற்றுகின்றோம் .
இதேபோன்று நாம் வாடிக்கையாக எடுத்துக் கொண்டிருக்கும் உயர்ந்த ரத்த அழுத்தத்திற்கும், நீரழிவு நோய், வாதம், இருதய நோய் மன அழுத்தம் போன்ற நோய்களுக்கு நிறைய மருந்துகள் தினம் தினம் உட்கொள்ளப்பட்டு வருகின்றது. நோய்க்கு எதிரான நமது போரில் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டதன் விளைவாக மருந்துகள் பற்றிய நமது தத்துவம்" நோயை தாக்கு" "நோயை அழித்தொழி" என்பதாக மாறிவிட்டது.
நோய்க்கு சிகிச்சை என்பது உடலை சமநிலைப்படுத்துவது என்பதை தாண்டி நோய்க் கிருமிகளையும் வைரஸ்க்களையும் எதிர்த்து தாக்குவது தான் மருந்து என்பதைப் போல நமது கண்ணோட்டம் மாறி வருகிறது.
இவ்வாறு நமது உடலில் ஏற்படக்கூடிய சமநிலை அற்ற தன்மையை சரி செய்வதில் முயற்சி எடுக்காமல் வெளிப்புற காரணிகளினாலோ அல்லது உட்புற காரணிகளினாலோ ஏற்படக்கூடிய நோய்த்தொற்றை சரி செய்வதில் மட்டுமே நமது கவனம் செல்கிறது.
எவ்வாறு நமது உடலில் சத்துக்கள் ஊட்டச்சத்துக்கள் குறையும்பொழுது நோய் ஏற்படுமோ, அல்லது பருவநிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய நோய்களும், உடலில் வெப்பநிலையும் குளிர்ச்சியும் அதிகமாக ஏற்படும் பொழுது நோய்களும், சரி உணவு செரிமானம் ஆகாமல் ஏற்படக்கூடிய நோய்களும் இவ்வாறு பல வகையான காரணிகளினால் நமது உடல் நோய்வாய்ப்படும்.
ஆனால் இவற்றை அனைத்தையும் கருத்தில் கொள்ளாமல் வெறுமனே கிருமிகளை மட்டும் கவனத்தில் கொண்டு இதனால் ஏற்படக்கூடிய தொற்றுகளுக்கு மருந்துகளை உட்கொள்வதினால் நமது உடல் நலக்குறைவு ஒருபோதும் சரியாகாது. எனவே எனவே தான் நாம் உடலுக்கு தேவையான சரிவிகித உணவு மற்றும் உடலை எவ்வாறு சமநிலைப்படுத்துவது என்பதைப் பற்றியும் நாம் தொடராக பார்த்து வருகின்றோம் .
சென்ற வார தொடரில் நாம் உணவில் சுவைக்காக சேர்த்துக் கொள்ளப்படும் உப்பு அதாவது சோடியம் எனும் தாது உப்பை பற்றி பார்த்தோம். நாம் வெறுமனே உப்பு என்பது சுவைக்காக மட்டும்தான் பயன்படுத்துகின்றோம் என்பதை தவிர்த்து அது ஒரு ஆரோக்கியத்திற்கு உகந்த பொருளாக இருக்கிறது என்பதையும் கவனத்தில் கொண்டோம்.
மேலும்...ஆரோக்கியம்எனவே நாம் உணவிற்காக எந்த பொருளை பயன்படுத்தினாலும் அது நமது உடலின் ஆரோக்கியத்திற்காக என்பதை பார்த்து பார்த்து பயன்படுத்தும் பொழுது அதன் பலன் முழுமையாக நமக்கு கிடைக்கும்.
அடுத்த வார தொடரில் மிகவும் சுவையாக நாம் உண்ணும் உணவுகளை பற்றிய உண்மையை அறிந்து கொள்வோம்
என்றும் வேட்டை வாசகர்களுக்காக
உங்களுடன்
டாக்டர் பர்ஜானா பாத்திமா M.D(Acu).
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments