Ticker

6/recent/ticker-posts


சுறாமீன் சம்பல்

யாருக்கு சுறாமீன்   சம்பல் பிடிக்கும்?

இதோ குறிப்பு
சுறாமீனை சிறு துண்டுகளாக  போட்டு 
அதில் மஞ்சள்  -உப்பு- புளி -சோளம் - மா
ஒரு முட்டை- வறமிளகாய் தூள் -ஒரு மேசைக் கரண்டி   - அனைத்தையும் போட்டு நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற விடவும் 
பின்னர் நன்றாக. பொரிக்கவும்  .

இதனுடன் சேர்ப்பதுக்கு சம்பல் 
தயார் பண்ண தேவைப் படும் பொருள்.
தக்காளி  -ஒன்று பழுத்த- மிளகாய்  நான்கு
ஊசி மிளகாய்  பழுத்தவை  மூன்று  -வெரிய வெங்காயம்   மூன்று - சிறு சீரகம்  ஒரு தேக் கரண்டி -உப்பு தேவைக்கு ஏற்ப -சிறுது அளவு கறிவேப்பிலை -  பூண்டு  ஐந்து -ஒரு தேக் கரண்டி சீனி- தாளிக்க எண்ணெய். 

இரண்டு வெங்காயம் பூண்டு  தக்காளி
இவைகளை நறுக்கி வைக்கவும்.
கறிவேப்பிலையைத் தவிர ஏனைய
பொருள் அனைத்தையும் அரைத்து எடுக்கவும்
அடுப்பில் எண்ணெய்  காய்ந்ததும்
நறுக்கிய பொருளை போட்டு வதக்கவும் நன்றாக. வதங்கியதும் அரைத்த கலவையைப் போட்டு பச்சை வாடை போகும் வரை வதக்கவும் நன்றாக வதங்கினால் அழகிய வாசனை  வரும் அப்போது சிறுது
அளவு நீர் விட்டு பொரித்த மீனையும் போட்டு 
நான்றாக அனைத்து மீனுக்கும் சாந்து 
படும் வாறு  கிளறவும் இறுதியில் கருவேப்பிலை  போட்டு இறக்கவும் 
சுவையான சுறாமீன்  சம்பல் தயார்.  

ஆர்.எஸ்.கலா


 


Post a Comment

0 Comments