Ticker

6/recent/ticker-posts

ராசையா!


தெட்டுத் தொட்டு
ரசிக்க வேணும் ராசையா. 
நீ எட்டி எட்டிப் போவதேன் 
சொல்லையா.
விட்டு விட்டுத் துடிக்கும்
இதயமதைப் பாரையா.
கட்டிக் கொள்ள 
ஏங்குவதைக் நீ அறியலையா.

நெட்ட நெட்ட மூங்கில் 
மேலே குயிலையா.
குட்டக் குட்டப் பாவாடைப்
பொண்ணுக்கு கவிகள் 
கூறுவதைக் நின்னு கேளையா.

சிட்டு சிட்டுப் பறவை
போல நானையா. 
தட்டித் தட்டி பறக்க விட்டேன்
மனதை உன் பக்கமையா.
வெட்டி வெட்டிப் போகாதே 
நீயும் செல்லையா.
வெட்டுக்கிளி விழியிலே
நீர்த் தேக்கமையா.

பட்டாம் பட்டாம்பூச்சியாய்
விட்டமெல்லாம் போகவேணும் 
சோடி போட்டையா.
தட்டுத் தட்டாய் அள்ள வேணும் 
இன்பங்களை உள்ளமையா.

ஆர் .எஸ் . கலா


 


Post a Comment

0 Comments