
ஊரும் கேட்கிறது
உனக்கென்ன இலாபம் என்று .
உறவும் கேட்கிறது
உனக்கென்ன இலாபம் என்று .
உள்ளமும் கேட்கிறது
உனக்கென்ன இலாபம் என்று....!
ஊமையாகவே
உதவுகின்றேன் நான் என்றும் .
உதவிக்கரம் நீட்டையிலே
இலாபம் பற்றிய சிந்நனையில்லை .
உதவி என்று வருவோரிடம்
இலாபத்தை எதிர்பார்ப்பதில்லை.
உண்மை அன்போட
உதவுவதால் இலாபம்
பற்றி பேச்சு இல்லை.
உண்மையான மனதோடு
உதவினால் இலாபம் என்னும்
வார்த்தைநுழைவதில்லை ....!
தன் நலத்தை மட்டும்
மனதில் பதிய விட்டு.
காட்டியும் கொடுத்து
மூட்டியும் விட்டு.
கொடுக்கும் கரங்களைத்
தட்டி விட்டு.
நாட்டை அழிக்கும்
குண்டுகளைப் போட்டு.
வீட்டையும் எரித்து விட்டு
நல்லவனைப் போல்
நடமாடுவோரைப் பார்த்துக்
கேளுங்கள் இவைகளால்
உமக்கு என்ன இலாவம் என்று.....!
நல்ல பெயரோடு
நான்வாழ்ந்தால்
அது எனக்கு இலாவம் .
நாளுபேர் மனதில்
நான் அமர்ந்தால்
அது எனக்கு இலாவம்.
நரம்பில்லா நாவு மறவாது
வாழ்த்தினால்
அது எனக்கு இலாபம் .
நகரம் விட்டு நகரம்
வாழ்வோரும்
எண்ணிப் பார்த்தால்
அது எனக்கு இலாபம் .....!
பொன்னும் பொருளும்
பெறுவதில்மட்டும்
இல்லை இலாபம்.
பொது நலத் தொண்டு
புரிவதிலும் உண்டு இலாபம்.
பொய் உரைத்து புகழ் தேடுவதில்
நிலைப்பதில்லை இலாபம் .
பொய் முகம் காட்டாது மெய்யென
நடப்பதிலே உண்டு இலாவம் ....!
உனக்கென்ன இலாபம் என்னும்
வினா தொடுக்காதீர்கள்
என்றும் தொடரும் என் தொன்று
மனித நேயம் உள்ள மனிதனாய்
நான் எப்போதும்
இலக்கியப் பாதையிலே
இலக்கோடு புறப்படும் அம்பு
கலங்கிய பார்வைக்கு
விளங்கா விட்டால் இழுக்காதே வம்பு.
ஆர்.எஸ்..கலா

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






0 Comments