
தென் கரோலினா மாநில பல்கலைக்கழகதில், மாணவர் விடுதி வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்.
ஹ்யூஜின் சூட்ஸ் மாணவர் தங்குமிடத்தில் கடந்த வியாழக்கிழமை இரவு சுமார் 9.15 மணியளவில் இந்தச் சம்பவம் நடைபெற்றதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து வளாகம் முழுவதும் அவசர முடக்கம் அமல்படுத்தப்பட்டது. உயிரிழந்தவர்களின் அடையாளத்தையும், காயமடைந்தவரின் நிலையைக் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.
கடந்த அக்டோபரில் இதே வளாகத்தில் நடைபெற்ற இரண்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்குப் பின்னர் மீண்டும் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வெள்ளிக்கிழமைக்கான வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
உள்ளூர் சட்ட அமலாக்க அதிகாரிகள், சுற்றுவட்டாரத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 3,000 மாணவர்கள் கல்வி கற்கும் இப்பல்கலைக்கழகம், அமெரிக்காவில் கறுப்பின மக்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க கல்வி நிறுவனமாகக் கருதப்படுகிறது.
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments