
ஈரான் மீதான போர் இன்னும் 10 நாட்கள் தொடர்ந்தால் ஆயுத பற்றாக்குறை ஏற்படும் என அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகன் அதிபர் டிரம்ப்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் உடனான அணுசக்தி பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து அந்நாடு மீது அமெரிக்கா - இஸ்ரேல் நாடுகளின் கூட்டுப்படை தாக்குதல் நடத்தியது. இதில் ஈரானின் உச்சபட்ச தலைவர் அயத்தோல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.
இதற்கு பதிலடி தரும்விதமாக இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த சூழலில் ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்க ராணுவம் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், இந்த போர் 4 முதல் 5 வாரங்களில் முடிந்துவிடும் என்றும் நீண்ட கால போரை நடத்தும் அளவிற்கு அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் அதிபர் டிரம்ப் கூறினார்.
இந்நிலையில் இன்னும் 10 நாட்கள் போர் தொடர்ந்தால், அமெரிக்காவிடம் உள்ள முக்கியமான ஏவுகணைகளின் கையிருப்பு தீர்ந்துவிடும் என்று அந்நாட்டு ராணுவ தலைமையகமான பென்டகனின் அதிகாரிகள் அதிபர் டிரம்ப்பிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேபோல் போர் நீண்ட நாட்கள் தொடரும் பட்சத்தில், வெடிமருந்து இருப்புகளை நிரப்புவதற்கான செலவும் அதிக அளவில் ஏற்படும் என்றும் பென்டகன் எச்சரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதேநேரம், அமெரிக்காவிடம் வெடிமருந்து கையிருப்பு போதிய அளவுக்கு இருப்பதாகவும், போர்களை என்றென்றும் அமெரிக்காவால் நடத்த முடியும் என்றும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






0 Comments