
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே ஏற்பட்டுள்ள கடுமையான மோதல் காரணமாக உலகின் உயரமான கட்டிடமான துபாயின் புர்ஜ் கலிபா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் போரால் இழப்பு ஏற்பட்டால் அதற்கு புர்ஜ் கலிபா கட்டிடத்திற்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளதா என்ற கேள்வி சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.
828 மீட்டர் உயரமுள்ள இந்த 'செங்குத்து கட்டிடம், சுமார் 1.5 பில்லியன் டாலர் மதிப்பிற்கு ஆரம்பத்தில் காப்பீடு செய்யப்பட்டிருந்தது. ஓமன் இன்சூரன்ஸ் (Oman Insurance) மற்றும் மியூனிக் ரே (Munich Re) ஆகிய நிறுவனங்கள் இதன் முதன்மை மற்றும் மறுகாப்பீட்டுப் பணிகளை மேற்கொண்டுள்ளன.
பொதுவாக, வணிகக் கட்டிடங்களுக்கான காப்பீட்டுத் திட்டங்களில் பயங்கரவாதம், சதிவேலை மற்றும் உள்நாட்டுக் கலவரங்கள் போன்றவை 'அரசியல் வன்முறை' பிரிவின் கீழ் சேர்க்கப்பட்டிருக்கும்.
ஆனால், ஒரு நாட்டின் நேரடி ராணுவத் தாக்குதல் அல்லது ஏவுகணைத் தாக்குதல் என்பது 'போர்-இடர்' (War-risk) பிரிவில் வரும். பெரும்பாலான சாதாரண காப்பீட்டுத் திட்டங்கள் நேரடிப் போரினால் ஏற்படும் சேதங்களுக்கு இழப்பீடு வழங்காது.
புர்ஜ் கலிஃபா போன்ற அதிக மதிப்புள்ள சொத்துகளுக்குத் தனியாக 'போர்-இடர் காப்பீடு' வாங்கப்பட்டிருக்கலாம், ஆனால் அதன் ஒப்பந்த விவரங்கள் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன.
இன்றைய பொருளாதாரச் சூழலில், புர்ஜ் கலிஃபாவை மீண்டும் கட்டுவதற்கு 2.8 முதல் 3.5 பில்லியன் டாலர் வரை செலவாகும் என மதிப்பிடப்படுகிறது.
ஏவுகணைத் தாக்குதல் போன்ற அசம்பாவிதங்கள் நடக்கும்போது, அது பயங்கரவாதச் செயலா அல்லது முறையான போர் நடவடிக்கையா என்பதைப் பொறுத்தே காப்பீட்டுத் தொகை வழங்கப்படுவது தீர்மானிக்கப்படும்.
இத்தகைய இக்கட்டான அரசியல் சூழலில், புர்ஜ் கலிஃபாவின் பாதுகாப்பு மற்றும் அதன் நிதிப் பாதுகாப்பு குறித்த கேள்விகள் இப்போது உலகம் முழுவதும் ட்ரெண்டாகி வருகின்றன.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






0 Comments