
அவர் ஆழ்ந்த சிந்தனை கலைத்து பெரும் மூச்சோடு எழுந்து தான் தங்கிடும் அறை தனைச் சென்று அடைந்தார். அங்கே அவருக்கான உணவு காத்துக் கொண்டு இருந்தன அதை அவர் உண்ணவில்லை.சற்று பழரசம் அருந்தி விட்டு சாய்வு நாங்காலியில் அமர்ந்து கொண்டார்.
சாப்பாட்டுக்காக ஒன்று கூடிய மக்கள் எல்லோரும் கலைந்து கொண்டே செல்லச் செல்ல சத்தமும் குறைந்தது. குமரனின் ஊர் மக்கள் அனைவரும் சாப்பாட்டை முடித்துக் கொண்டு வெற்றலை பாக்கையும் போட்டுக் கொண்டு மரநிழல் பார்த்து அமர்ந்து கொண்டு கதை பேச ஆரம்பித்தார்கள் கிராமத்து மக்கள் அல்லவா அவர்களின் வழமையான பழக்கவழக்கக்கங்களில் ஒன்று தானே வெற்றலை போடுவதும் மரத்தின் நிழல் தேடி அமர்ந்து கொள்வதும்.
இணைந்தே சாப்பிடத் தயாரான மருத்துவர்கள் அனைவரின் விழியிலும் ஒரு ஏக்கம் தெரிந்தது. நாம் எல்லோரும் இணைந்து உணவு உண்ணும் இன்றைய நாள் நினைவில் தங்கிடும் நாளாய் அமையட்டும் என சரவணன் கூறவே ஆமாம் சரவணா நானும் அதையே நினைத்தேன் என்றார் மூத்த மருத்துவர் எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தது முதல் தடவையாக இப்படி ஓர் வார்த்தை அவரின் நாவில் இருந்து வந்து விழுந்ததே அதற்குக் காரணம்.
என்ன எல்லோரும் இப்படிப் பார்ப்பது என்று கேட்டார் மூத்த மருத்துவர் உடனே சரவணன் கூறினான் இல்லை ஐயா இப்போது பேசியவை நீங்கள் தானா என்று தான் பார்த்தோம் ஒரே ஆச்சரியமாக உள்ளது இன்று இப்படி நீங்கள் கூறியமை நம்பவே முடியல இது நம் ஐயாவின் குரல் தானா என்று.
அவர் இதைக் கேட்டதும் தலையைச் சாய்த்துக் கொண்டு கூறினார் மன்னிக்க நீங்கள் எல்லோரும் நான் சற்றுக் கடுகடுப்பாக இருந்து விட்டேன் உங்கள் எல்லோரிடமும் அது என் குணம் இல்லை எனக்குள் உள்ள சில சஞ்சலமே என்னை அப்படி மாற்றி விட்டது எல்லோரிடமும் பொல்லாத ஒரு நவராக சித்தரித்துக் காட்டியது.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments