Ticker

6/recent/ticker-posts

ராஜகுமாரியின் சுயம்வரம்-120


மீண்டும் மன்னிக்க. முக்கியமாக குமரன் என்னை மன்னிக்க நான் ரொம்ப நோகடித்து விட்டேன் உன்னை மட்டமாகப் பேசி இருக்கின்றேன்  உன் திறமையை பல வழியில் அவமானப் படுத்தி உள்ளேன்  பெரிது படுத்தாமல் புன்னகையோடு நீ கடந்து செல்லும் போதெல்லாம் மனசில் முள்ளுக் குத்துவது போல் இருக்கும் வேறு வழி இல்லை இதை நான் செய்தே ஆக வேண்டும் உன்னை ஏதோ ஒரு வழியில்  விரட்டி விட்டு உன் இடத்தைப் பிடிக்கவே இப்படி முயற்சி செய்தேன்.

உமக்கு பின் நான் என்னும் கால அட்டவணையே அதற்குக் காரணம் நீ விலகி விட்டால் அடுத்து நான் தானே அப்போ உன்னை விரட்டுவதே ஒரே வழி என்று என் கடமை உணர்வு கூறிக் கொண்டே இருந்தது அதனால் தான் எப்போதும் பொல்லாத முகத்தையே காட்டினேன் உமக்கும் எனக்கும் இடையில் வேறு ஒருத்தர் அல்லது இருவர் இருந்து எனக்கான வாய்பு தள்ளிப் போய் இருந்தால் நிச்சியம் நான் இது போல் உன்னிடம் வெறுப்பைக் காட்டி இருந்திருக்க மாட்டேன் குமரா என்னை மன்னித்திடு.

ஐயோ ஏன் இப்படி வயது வரம்பு பாராமல் மன்னிப்புக் கோருவது ஐயா நான் உங்களை எதிரியாகவோ விரோதியாகவோ நான் பார்த்து இருந்தால் தானே உங்களின் மன்னிப்பை எதிர் பார்த்திட நான் தான் அப்படி நினைத்திட வில்லையே. சரி விடுங்க இப்போது என் கேள்விக்கு பதில் கூறுங்கள் எதற்காக நீங்கள் அப்படி நடந்து கொன்றது ஏதேனும் பலமான காரணம் உண்டா கூறுங்கள் என்னால் முடிந்தால் அதை எப்படி தீர்த்து வைப்பது என ஆலோசனை செய்வோம் என்றான் புன்னகையோடு.

இதை கேட்டுக் கொண்டு இருந்த ஏனையோரும் ஆமாம் கூறுங்கள் ஐயா என்றார்கள் சற்று தயக்கத்தோடு சரி கூறுகிறேன் என்றார் மருத்துவர் கலங்கிய கண்ணீரோடு கூறினார் என் மகன் என்னை விட்டுப் போய் விட்டான் அவனுக்கு இரு பெண் பிள்ளை நான் தான் அவர்களைக் கவனிக்க வேண்டிய நிலையாச்சு படிப்புச் சிலவே பெரும் சிலவாச்சு என் நிலத்தை வித்து நன்றாகப் படிப்பித்தேன் அவர்களில் ஒருத்தி படித்துப் பட்டம் பெற்று வெளியூர்  பையனைக் காதலித்துத் திருமணம் செய்து விட்டுப் போய்த்தாள்.

அடுத்த பொண்ணு என்னோடு தான் இருக்கா அவளுக்கு கொஞ்சம் குறைபாடு அவளைக் கரை சேர்த்திட கடுமையாகச் சிரமப் பட்டேன் ஒரு வரன் வந்தது அதை முடித்துக் கொடுத்திட முடிவு செய்தோம்   எல்லாம் சரி வீடு நிலம் கொடுத்தால் தான் திருமணம் ஏற்கனவே உடல்க் குறை இதில் சீரும் குறை என்றால் எப்படி அதனால் ஒரு வருடம் அவகாசம் தருகிறோம் அதற்குள் வீடுநிலம் ஏற்பாடு செய்து விடுங்கள் என்று பையனோட சித்தி கூறி விட்டார்.

(தொடரும்)

 


Post a Comment

0 Comments