
குறள் 136:
ஒழுக்கத்தி னொல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக் கறிந்து.
ஒழுக்கம் பிறழ்ந்தால் இழிவென் றறிந்தோர் ஒழுக்கம் தவறமாட்டார் சொல்.
குறள் 137:
ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவ ரெய்தாப் பழி.
ஒழுக்கம் தலைநிமிர வைக்கும்! பிறழ்ந்தால் பழியும் தலைகுனிவும் தான்.
குறள் 138:
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கந் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்.
நல்லொழுக்கம் நன்மை தருவது! தீயொழுக்கம் அல்லலுக்கு வித்தூன்றும் சொல்.
குறள் 139:
ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய வழுக்கியும் வாயாற் சொலல்.
தவறியும் தீயசொல் சொல்லார் ஒழுக்க நெறிகொண்டு வாழ்வோர்கள் தாம்.
குறள் 140:
உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றுங் கல்லா ரறிவிலா தார்.
உயர்ந்தோர் ஒழுக்கத்தை ஏற்க மறுப்போர் பலகற்றும் கல்லார் உணர்.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments