Ticker

6/recent/ticker-posts

1330 குறள்களுக்கு குறள்வடிவில் விளக்கம்-31


குறள் 154:

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை போற்றி யொழுகப் படும்.

பொறுமையின் சின்னமாக உள்ளவரை மாந்தர் நிறைகுடம் என்பார் புகழ்ந்து.

குறள் 155:

ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.

பொறுமை இழந்தோரைத் தூற்றுவார்! என்றும் பொறுத்தாரைப் பொன்னென்பார் இங்கு

குறள் 156:

ஒறுத்தார்க் கொருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ்.

தவறுசெய்தால் தண்டித்தால் கடுகளவே இன்பம்! பொறுத்தாலோ வாழ்நாள் புகழ்.

குறள் 157:

திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந் தறனல்ல செய்யாமை நன்று.

பழிக்குப் பழியென்று வாழ்தல் மடமை! பழிமறந்து வாழ்வதே பண்பு.

குறள் 158:

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தத் தகுதியான் வென்று விடல்.

செருக்குடன் தீங்கிழைக்கும் தீயோரை என்றும் பொறுமையுடன் வெல்தல் எளிது.

(தொடரும்)


 


Post a Comment

0 Comments