
புறங்கூறாமை
குறள் மொழி 52
பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும் திறன்தெரிந்து கூறப் படும்.
குறள் மொழியின் பொருள் :
குறள் எண் :186
ஆதாரமின்றி வீண் சந்தேகம் கொண்டு பிறருடைய குற்றங் குறைகளைப் பழித்து புறங்கூறுபவரின் இழிவான பண்பை, பிறர் ஆராய்ந்து எடுத்துக்கூறுவர்.
நபிமொழி!
ஆதாரமின்றி பிறரைச் சந்தேகப்படுவது குறித்து உங்களை எச்சரிக்கின்றேன். ஏனெனில், சந்தேகம் கொள்வது மிகப்பெரிய பொய்யாகும். பிறரின் குறையைத் துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். கோபமும் கொள்ளாதீர்கள்
மாறாக அன்பு பாராட்டுவதில் சகோதரர்களாய் இருங்கள்.
அண்ணல் நபி (ஸல்)
ஆதாரம் அபூஹீரைரா (ரலி) புகாரி–6064
நடுவு நிலைமை
குறள் மொழி 53
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம் நடுஓரீஇ அல்ல செயின்.
குறள் மொழியின் பொருள் :
குறள் எண் : 116
ஒருவருடைய நெஞ்சம் நடுவு நிலை தவறிய செயல்களைச் செய்ய நினைத்தாலே தாம் வாழ்க்கையில் கெடப் போகிறோம் என்பதையும் உணர்ந்து கொள்ளவேண்டும்.
நபிமொழி:
இறைதூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்! மனிதர்கள் சிலர் அல்லாஹ்வின் (இறைவனின்) செல்வத்தை நியாயமாகப் பங்கிடாமல் நடுவு நிலைமை தவறி அநியாயமாகப் பங்கீடு செய்து கையாள்கிறார்கள். அவர்களுக்கு மறுமை நாளில் நரகமே உரியதாகும்.
அறிவிப்பாளர் : கவ்லா அல் அன்சாரிய்யா(ரலி) நூல் : புகாரி: 3118
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments