Ticker

6/recent/ticker-posts

சாரலில் ஆடும் சாதிமல்லிப் பூச்சரமே!.


சாயங் காலவேளையிலே 
சாலையோரப் பூங்குயிலே .
சாய்ந்தாடுகிறாயே வண்ணமயிலாய்  
சாந்துப்பொட்டு பெண்மயிலே .

சாரைப்பாம்பு வளைவாகவே 
சாமந்துக் காற்றாகவே .
சாரலில் ஆடும் 
சாதிமல்லிப் பூச்சரமே .

மயங்கியே போனேனடி
மனசுக்குள் மாமனானே .
மந்தாரப் பூவே 
மடிசாயவே வேணுமடி  .

மல்லிகைச் சிரிப்பாலே 
மணக்கிறாயே நெஞ்சுக்குள்ளே .
மரக்கத்தான் முடிந்திடுமோ 
மரகதமே உனதழகினை .

அள்ளியணைத்திட வரவோ
அல்லிமலரே சொல்லடி .
அன்பான வாழ்க்கையிலே
அலையாகிடுவோம் வாருமடி 

ஆர் .எஸ் . கலா

 


Post a Comment

0 Comments