
அமெரிக்கக் குடியுரிமையை ரத்து செய்வதற்கான கட்டணத்தைக் குறைத்துள்ளது அமெரிக்க அரசாங்கம். இதனால் நட்டம் ஏற்பட்டாலும் செயல்முறையை எளிமையாக்க டிரம்ப்பின் நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது.
பல ஆண்டுகளாகவே கட்டணத்தைக் குறைக்க அமெரிக்க அரசாங்கம் உறுதியளித்து வந்துள்ளது. முன்னதாக அமெரிக்கக் குடியுரிமையை ரத்து செய்வதற்கு 2,350 டாலர் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
2015ஆம் ஆண்டிலிருந்து இது நடப்பில் உள்ளது. இப்போது இந்தக் கட்டணம் 450 டாலருக்குக் குறைக்கப்படும். அமெரிக்கக் குடியுரிமையை ரத்து செய்வோரின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வந்துள்ளது.
2024ஆம் ஆண்டில் 4,820 பேர் தங்கள் அமெரிக்கக் குடியுரிமையை ரத்து செய்துள்ளனர்.
2026 ஆம் ஆண்டில் அமெரிக்கக் குடியுரிமையை ரத்து செய்ய 30,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அமெரிக்காவின் மாறிவரும் அரசியல் சூழல், கடுமையான வரி விதிப்பு போன்றவை இதற்குக் காரணங்கள் என அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments