
இனியவை நாற்பது-13
மான மழிந்தபின் வாழாமை முன்இனிதே
தான மழியாமைத் தானடங்கி வாழ்வினிதே
ஊனமொண் றின்றி உயர்ந்த பொருளுடைமை
மானிடவர்க் கெல்லாம் இனிது.
விளக்கம்:
பெருமை எல்லாம் போன பிறகு உயிர் வாழாதிருப்பது இனிது.
பிறருக்கு கொடுத்து வாழ்வதற்கு போதிய அளவு செல்வம் இருக்கும் படி அளவோடு வாழும் வாழ்க்கை இனிது.
குறை இல்லாத சிறந்த செல்வத்தை மிகுதியாகப் பெற்றிருப்பது எல்லோருக்கும் இனிது.
இனியவை நாற்பது-14
குழவி தளர்நடை காண்டல் இனிதே
அவர்மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே
வினையுடையான் வந்தடைந்து வெய்துறும் போழ்து
மனனஞ்சான் ஆகல் இனிது.
விளக்கம்:
சின்னஞ் சிறு குழந்தைகள் தள்ளாடித் தள்ளாடி நடப்பதைப் பார்த்து மகிழ்வது இனிது.
அவர்களது மழலைச் சொற்களைக் கேட்டு மகிழ்வது அமிர்தத்தை விட இனிது.
தீ வினைகளுக்கு உரிய விளைவு வந்து, துன்பப் படுத்தும் போது அஞ்சாமல் இருப்பது இனிது.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments