
கடந்த மாதம் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது, மொத்தம் 7,950 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பாடசாலை மாணவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் திகதி முதல் இந்த விசேட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
குற்றச்செயல்கள் மற்றும் சமூக விரோத செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநிறுத்தும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
lankatruth

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments