
சிங்கப்பூரில் செயற்கை நுண்ணறிவைத் (AI) தவறாகக் கையாண்டதற்காக 2 வழக்கறிஞர்கள் ஆளுக்கு 5,000 வெள்ளி செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
சிவில் வழக்கின் இறுதி விவாதங்களில் அவர்கள்
2 போலியான வழக்குகளை உதாரணங்களாகப் பயன்படுத்தியிருந்தனர்.
சொத்துத் தகராறு தொடர்பான வழக்கில் பிரதிவாதித் தரப்பின் வழக்கறிஞர்கள் தங்கள் வாதத்திற்காக இரண்டு பழைய தீர்ப்புகளைச் சுட்டினர்.
பிரதிவாதியின் முதன்மை வழக்கறிஞர் ஆராய்ச்சிப் பணிக்காக மற்றொரு வழக்கறிஞரின் உதவியை நாடினார்.
உதவிக்கு வந்த வழக்கறிஞர் அந்தப் பணிக்குத் தனது அலுவலகத்தில் உள்ள சட்ட உதவியாளரை அணுகினார் என்றும் அவர் AI கருவியைப் பயன்படுத்தினாரா என்பது தமக்குத் தெரியாது என்றும் கூறினார்.
அந்தத் தவறான தகவல்களை வாதித் தரப்பின் வழக்கறிஞர்கள் கண்டுபிடித்து நீதிமன்றத்திடம் முறையிட்டனர்.
நீதிபதி எஸ். மோகன் வழக்கில் தீர்ப்பளித்தார்.
வழக்கறிஞர்கள் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் தவறில்லை, ஆனால் அதன் மூலம் கிடைக்கும் தகவல்களைச் சரிபார்க்க வேண்டியது அவர்களின் பொறுப்பு என்று அவர் வலியுறுத்தினார்.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






0 Comments