Ticker

6/recent/ticker-posts

யானையின் காலடியில் அமர்ந்து நோன்பு துறந்த பாகன்


யானையின் காலடியில் அமர்ந்து நோன்பு துறந்த பாகனின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. 

இந்தியாவின் கேரள மாநிலத்தில் கோழிக்கோடு தாமரசேரி சேர்ந்த பாகன் சைனுதீன், கடந்த 20 ஆண்டுகளாக குடும்பத்துடன் யானை வளர்ப்பு தொழில் செய்துவருகிறார்.

தற்போது அவர்களிடம் நான்கு யானைகள் உள்ளன, இவற்றை கோவில் திருவிழாக்களுக்கு வாடகைக்கு விடுவது வழக்கம்.

திருச்சூர் அருகே உள்ள ஒரு கோவிலில் நடைபெறிய கும்பபரணி திருவிழாவிற்காக சைனுதீன் தனது யானையுடன் சென்றார்.

மதிய உணவுக்கு பிறகு, கோவில் நிர்வாகிகள் நோன்பு இருப்பதாக கூறி, அவருக்கு நோன்பு துறக்க ஜூஸ் மற்றும் பழவகைகள் கொண்டு வழங்கினர்.

சைனுதீன் கூறுகையில், "நோன்பு துறக்க எனக்கு தண்ணீர் பாட்டிலும் வசதி செய்து கொடுத்தனர். இது ஒரு மனிதநேய செயலாகும்" என தெரிவித்தார்.

இந்த சம்பவம், யானை வாடகை தொழிலாளரான சைனுதீனுக்கும், கோவில் நிர்வாகிகளுக்கும் இடையேயான அன்பும் மரியாதையும் காட்டும் நிகழ்வாக உலக ஊடகங்களால் “நிஜமான கேரள ஸ்டோரி” என புகழாரம் பெற்றுள்ளது.

jvpnews

 


Post a Comment

0 Comments