Ticker

6/recent/ticker-posts

பணிச்சுமையை குறைக்க மார்க் ஜுக்கர்பர்க் எடுத்த அதிரடி முடிவு!


மெட்டா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பர்க், தனது பணிச்சுமையைக் குறைக்கவும், நிறுவனத்தை திறம்பட நிர்வகிக்கவும் ஒரு பிரத்யேக ஏஐ முகவரை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சியால் உலகம் முழுவதும் அமேசான், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுபட்டுள்ளன. பெருநிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களின் குறைகளை தீர்ப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் மனிதர்களுக்கு பதிலாக ஏஐ முகவர்களை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பர்க் தனது பணிகளுக்கு உதவும் வகையில் ஒரு செயற்கை நுண்ணறிவு முகவரை உருவாக்கி வருவதாகக் கூறப்படுகிறது.

பொதுவாக ஒரு நிறுவனத்தின் உயர் அதிகாரிக்கு ஏதேனும் தகவல் தேவைப்பட்டால், அவர் பல்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகளிடம் கேட்டுப் பெற வேண்டியிருக்கும். ஆனால், இந்த ஏஐ முகவர் மூலம் ஜுக்கர்பெர்க் தனக்கு தேவையான தரவுகளை மிக விரைவாக பெற திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
சிறந்த வீடியோக்கள்

எதிர்காலத்தில் நிறுவனத்திற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள ஒவ்வொரு நபருக்கும் ஒரு தனிப்பட்ட 'ஏஐ முகவர்' இருக்க வேண்டும் என்று ஜுக்கர்பர்க் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். அதனை தன்னிடமிருந்தே அவர் தொடங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

news18


 


Post a Comment

0 Comments