Ticker

6/recent/ticker-posts

அதிபர் டிரம்ப் பேசிவரும் ஈரானியத் தலைவர் யார்?


அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) ஈரானியத் தலைவர் ஒருவருடன் பேசிவருவதாகவும் ஈரான் போரை நிறுத்த விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

அமெரிக்காவுக்கான சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்கொஃபும் (Steve Witkoff) அதிபர் ஆலோசகர் ஜரட் குஷ்னரும் (Jared Kushner) அந்தத் தலைவருடன் சென்ற ஞாயிற்றுக்கிழமை சந்திப்பு நடத்தியதாகத் திரு டிரம்ப் கூறினார்.

அந்தத் தலைவர் யார் என்ற தகவலை அவர் வெளியிடவில்லை. அது ஈரானிய உச்சத் தலைவர் அல்ல என்றார் அவர்.

பேச்சு நடந்தது என்று கூறப்படுவதை ஈரான் மறுத்துள்ளது.

எண்ணெய் விலையையும் பங்குச் சந்தையையும் கட்டுப்படுத்த திரு டிரம்ப் வெளியிட்ட பொய்த் தகவல் அது என்று ஈரான் கூறுகிறது

இதற்கிடையே ஈரானின் அடுத்த தலைவர் பொறுப்புக்கு அந்நாட்டு நாடாளுமன்றப் பேச்சாளரை முன்மொழிய டிரம்ப் நிர்வாகம் திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது.

Politico செய்தி நிறுவனம் அந்தத் தகவலை வெளியிட்டது.

64 வயது முகமது பாகர் கலிபாஃப் (Mohammad Bagher GhaliBaf) ஈரானை வழிநடத்தக்கூடியவர் என்றும் அவர் அமெரிக்காவுடன் நட்பாகச் செயல்பட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபடக்கூடியவர் என்றும் வெள்ளை மாளிகை கருதுவதாக Politico குறிப்பிட்டது.

seithi


 


Post a Comment

0 Comments