
ஈரானின் உயரிய தலைவரான அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானில் பதற்றம் காணப்படுகிறது. அவரது படுகொலையை கண்டித்து ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த பிப்ரவரி 28, 2026 அன்று, ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள கமேனியின் அலுவலகத்தைக் குறிவைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து வான்வழித் தாக்குதலை நடத்தின. இதில் ஈரான் உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டதை மார்ச் 1-ஆம் தேதி ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தது.
இந்தத் தாக்குதலில் கமேனியின் குடும்ப உறுப்பினர்களான அவரது மகள், மருமகன் மற்றும் பேரக்குழந்தைகள் உள்ளிட்டோரும் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 36 ஆண்டுகளுக்கும் மேலாக ஈரானை வழிநடத்தி வந்த 86 வயதான ஒரு தலைவரின் மறைவு, அந்த நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய அரசியல் மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இன்று ரமலான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான 'யோம்-இ-குத்ஸ்' தினத்தை முன்னிட்டு தெஹ்ரான் வீதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுவாக இந்தத் தினம் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவிக்கக் கடைப்பிடிக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு, கமேனியின் படுகொலையைக் கண்டித்தும், அமெரிக்க-இஸ்ரேல் படைகளுக்கு எதிராகவும் மக்கள் பெரும் கொந்தளிப்புடன் காணப்பட்டனர். போராட்டக்காரர்கள் காமேனியின் உருவப்படங்களை ஏந்தியபடி, "அமெரிக்காவிற்கு வீழ்ச்சி", "இஸ்ரேலுக்கு வீழ்ச்சி" என முழக்கங்களை எழுப்பினர்.
ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் இந்தப் படுகொலையை ஒரு "மன்னிக்க முடியாத குற்றம்" என்று வர்ணித்துள்ளார். ஈரானில் தற்போது 40 நாட்கள் தேசியத் துக்க தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






0 Comments