
ஈரானுக்கு சொந்தமான ஒரு கப்பலை அமெரிக்கா நீர்மூழ்கிக் கப்பல் (submarine) தாக்கியதில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்ட இலங்கை கடற்படையின் சிறப்பு நடவடிக்கைகள், உலகம் முழுவதும் அன்பும் மரியாதையும் பெற்றுள்ளன.
இந்த நடவடிக்கைக்கு இலங்கை விமானப்படை கண்காணிப்பு ஆதரவையும் வழங்கியது. நேற்று பிற்பகல் நிலவரப்படி 32 ஈரானிய கடற்படை வீரர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். மேலும், 84 ஈரானிய கடற்படை வீரர்களின் சடலங்கள் இன்று (மே 05) காலை காலி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து கராப்பிட்டி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆய்வாரள்கள், மத்திய கிழக்கு பகுதி இப்போது மனிதாபிமானமில்லா போருக்குள் மூழ்கியுள்ளதாகவும், ஆனால் இலங்கை கடற்படை மனித உயிர்களை காப்பாற்றும் பணியை இந்திய பெருங்கடலில் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்.
lankatruth

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments