
மெமரி லாஸ் கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் எப்போதுமே கோலிவுட்டில் ஹிட் அடிக்கும். அதிலும் கஜினி, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் உள்ளிட்ட திரைப்படங்களை பலரும் மறக்க மாட்டார்கள்.
அந்த திரைப்படங்களில் கதாபாத்திரங்களுக்கு தலையில் காயம் ஏற்படும். அதனால்தான் அவர்களுக்கு பழைய நினைவுகள் மறந்துபோகும். அப்படியிருக்க, ஒரு பெண்ணுக்கு தலையில் காயம் ஏற்படாமலேயே, அதுவும் மலம் கழித்ததால் மெமரி லாஸ் ஏற்பட்டுள்ளது. இந்த வினோத நிகழ்வு குறித்து இங்கு காணலாம்.
பெண்ணுக்கு நடந்த கொடூரம்
ஹாங்காங் நாட்டில் பெண் ஒருவருக்கு கடும் மலச்சிக்கல் பிரச்னை இருந்துள்ளது. அவர் அதிகம் அழுத்தம் கொடுத்து மலம் கழித்ததால், அவரது கடந்த 10 வருட நினைவு முற்றிலும் மறந்துள்ளார். இந்த அரிய உடல் ரீதியான பிரச்னை நெட்டிசன் மத்தியில் வைரலாகி உள்ளது.
@Psychological என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்து தகவல் பகிரப்பட்டுள்ளது. அந்த பதிவுதான் சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தையும், உரையாடலையும் ஏற்படுத்தி உள்ளது.
கடுமையாக முக்கி... மலம் கழித்தபோது...
பாதிக்கப்பட்ட பெண் சுமார் 2 வாரங்களாக மலச்சிக்கலால் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்துள்ளார் என்றும் கழிவறையை பயன்படுத்தும்போது அவருக்கு கடும் அசௌகரியமாக இருந்து வந்தது என்றும் கூறப்படுகிறது.
அப்படியிருக்க ஒருநாள், அவர் கழிவறைக்கு சென்று, அதிக அழுத்தம் கொடுத்து மலம் கழிக்க முயற்சித்திருக்கிறார். அப்போதுதான் அவருக்கு திடீரென உடல்நலக்குறைப்பாடு ஏற்பட்டுள்ளது. இதைத்தான் மருத்துவர்கள் 'Mental Blackout' என கூறுகிறார்கள்.
80 மணிநேரத்திற்கு ஞாபகமே இல்லை
அந்த பெண்ணுக்கு இதனால் கடந்த 10 ஆண்டுகளாக நடந்தே முற்றிலும் மறந்துவிட்டத, எந்த சம்பவமும் அந்த பெண்ணுக்கு நினைவில்லையாம். சுமார் 80 மணிநேரத்திற்கு அவருக்கு எதுவும் நியாபகமே இல்லையாம். இதுபோன்ற மெமரி லாஸ் ஏற்பட்ட உடனே, அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவருக்கு உடனே சிகிச்சையும் வழங்கப்பட்டுள்ளது.
அவரது மூளையை ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர், ஆனால் மருத்துவர்களுக்கு அதில் எந்த பிரச்னையும் இருப்பதாக தெரியவில்லை. அதைத் தொடர்ந்தே, Transient Global Amnesia என்ற அரிய நோய்க்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். Transient Global Amnesia என்பதை TGA என்றும் அழைப்பார்கள்.
பெண்ணுக்கு நடந்தது என்ன?
TGA என்பது குறுகிய கால நோய்தான். இந்த நோயின் போது குறுகிய காலத்திற்கு மெமரி லாஸ் ஏற்படும் என கூறப்படுகிறது. அந்த பெண்ணின் கடுமையான அழுத்தம் காரணமாக, கழுத்து நரம்பு வால்வுகளில் உள்ள பிரச்னைகள் காரணமாக, மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தையும் ஆக்ஸிஜன் விநியோகத்தையும் குறைத்திருக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் நம்புகின்றனர்.
சில சமயங்களில், தீவிரமான உடல் உழைப்பு மூளைக்குச் செல்லும் ஆக்ஸிஜன் ஓட்டத்தில் சிறிது நேரத்திற்கு தடையாக இருந்து, குழப்பம் அல்லது நினைவாற்றால் சார்ந்த பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது.
நல்வாய்ப்பாக தப்பித்த பெண்
ஆனால் இந்த பெண்ணின் வழக்கில், நல்வாய்ப்பாக மருத்துவமனையில் அந்த பெண் இரவு தங்கி சிகிச்சை பெற்றிருக்கிறார். இதனால் அவரது நினைவுகள் படிப்படியாக திரும்பியிருக்கின்றன. இருப்பினும் அந்த சம்பவம் குறித்த நினைவுகள் அவருக்கு மீண்டும் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.
2019இல் நடந்த சம்பவம்
இது சம்பவம் கடந்த 2019ஆம் ஆண்டில் நடந்ததாக கூறப்படுகிறது. தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் இந்த சம்பவம் தலைக்காட்டி உள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து நெட்டிசன்கள் பலரும் அவநம்பிக்கையையே தெரிவிக்கின்றனர். மேலும், நகைச்சுவையாகவும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். அதிலும் ஒருவர், "10 வருடத்திற்கு முன் என் வாழ்க்கை நன்றாக இருந்தது. எனவே, இந்த 10 வருஷத்தை மறக்க நானும் இப்போது கழிவறைக்கு ஓடுகிறேன்" என நகைச்சுவையாக பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.
zeenews

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments