
"ஒப்புக் கொண்டால் கட்டிக் கொடுங்க சட்டப்படி திருமணத்தை பதிவு செய்து அத்தோடு ஒரு சில மாதங்களுக்குப் பின் உங்க பேத்தி நீங்க மாத்திரம் தனி குடித்தனம் போய் விடுவதையும் முன் கூறுங்கள் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள. மறுத்தால் கண்டிப்பாக அந்த வாழ்க்கை நல்லவை இல்லை அதை நிராகப்பதே நன்று காரணம் உங்க பேத்தி பழமையான பெண்கள் போன்று இருந்தால் குடும்பத்தைப் பிரிக்காது கூட்டுக் குடும்பமாக வாழ்வதே நன்று."
"இவர் அப்படி இல்லை ஆகையால் அது அவருக்கு மன ரீதியாக பல பிரச்னை கொடுத்திடும் எல்லோரும் ஒன்றாக உடுத்தி ஆடி பாடி கூடி சமைத்து இப்படி இருக்கும் போது இவர் மாத்திரம் ஓர் இடத்திலே இருப்பதும் அதைப் பார்த்து சிலர் அனுதாபம் காட்டுவதும் இன்னும் சிலர் கேலி செய்வதுமாக இருப்பார்கள் இவை பல இடங்களில் நடப்பவை தானே" .
"அந்த சூழ்நிலையிலே மனதளவில் வேதனை அடைவார் இதுவே தனி வீடு என்றால் தன்னால் முடிந்ததை இதோ இப்போது எப்படி வாழ்க்கை போகிறதோ அப்படியே சாதாரணமாக போய்க் கொள்ளும் அங்கே யாரும் இல்லை வெறுப்பு ஏற்றவோ நோகடிக்கவோ அதனால் தான் தனிக் குடித்தனம் பற்றிக் கூறினேன் மற்றும் படி குடும்பத்தை பிரிப்பதற்காக இல்லை ஐயா" என்றான் குமரன்.
"புரிகிறது குமரா நானும் இவை பற்றி சிந்திக்கின்றேன் என் பேத்தி வாழ்வே எனக்கு முக்கியம்" என்று கூறியவர் எழுத்தாணியை எடுத்து ஏதோ ஒன்றை கடகடவெனக் கிறுக்கி விட்டு நீட்டினார் குமரனிடம்.
"இந்தா குமரா இதை நீ எல்லோரிடமும் கேட்கும் போது கேலி செய்தேன் இப்போது நானே அனைவருக்கும் முன்பாக தருகிறேன் எத்தனை மாற்ற இல்லையா குமரா" என்று கேட்டு புன்னகைத்தார்.
அவன் அதைப் பிரித்துப் பார்த்தான் அவை அவரோட ஊர் விலாசம் மீண்டும் புன்னகையோடு கூறினான், "நல்லது ஐயா நானும் தருகிறேன் இப்போதே அனைவரும் பரிமாறிக் கொள்வோம் வாருங்கள் எல்லோரும் உங்கள் விலாசம் கூறுங்கள்" என்று கூறி நோட்டைக் கையில் எடுத்தான் குமரன்.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments