Ticker

6/recent/ticker-posts

PBKS சாதனை வெற்றி... டி20 வரலாற்றிலேயே பெஸ்ட் சேஸ்ஸிங்... அய்யோ பாவம் கேஎல் ராகுல்!


ஐபிஎல் 2026 சீசனின் முதல் பாதி முடிந்துவிட்டது. முதல் பாதி முழுவதும் பஞ்சாப் கிங்ஸ் தோற்கவே இல்லை, இன்றும் கூட 265 ரன்கள் என்ற பெரிய சேஸ்ஸிங்கை, அதாவது டி20 வரலாற்றிலேயே வெற்றிகரமான சேஸ்ஸிங்கை பஞ்சாப் கிங்ஸ் அணி நிகழ்த்தி காட்டியிருக்கிறது.

டெல்லியின் அதிரடி பேட்டிங் வீண்

டெல்லி கேப்பிடல்ஸ் அணி தனது ஹோம் மைதானமான டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் டாஸை வென்றதும் பேட்டிங்கை தேரவு செய்தது. பேட்டிங்கை தேர்வு செய்து 264 ரன்களை வெறும் 2 விக்கெட்டை மட்டும் இழந்தது குவித்தது. கேஎல் ராகுலின் 152 ரன்கள் (ஸ்ட்ரைக் ரேட் 226.87), நிதிஷ் ராணாவின் 94 ரன்கள் (ஸ்ட்ரைக் ரேட் 206.82) அனைத்தையும், பஞ்சாப் அணியின் ஓபனர்கள் தவிடுபொடியாக்கிவிட்டனர்.

பவர்பிளேவில் பந்தாடிய பஞ்சாப்

பஞ்சாப் அணியின் ஓபனர்கள் பிரியான்ஷ் ஆர்யா 43 ரன்கள் (ஸ்ட்ரைக் ரேட் 252.94), பிரப்சிம்ரன் சிங் 76 ரன்கள் (ஸ்ட்ரைக் ரேட் 292.31) என அடித்து நொறுக்கினர். இதனால் பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 116 ரன்களை குவித்தனர். ஆனால், டெல்லி கேப்பிடல்ஸ் அணி பவர்பிளேவில் 68 ரன்களை மட்டுமே அடித்திருந்தது.

கவலையில் மற்ற அணிகள்

இதனாலேயே கேஎல் ராகுல் 152 ரன்கள் அடித்தும் பஞ்சாப் அணி எளிதாக சேஸ் செய்துவிட்டது. அதுவும் 7 பந்துகளை மீதம் வைத்து பஞ்சாப் வெற்றிகரமாக சேஸ் செய்தது பலரையும் வியக்க வைத்துள்ளது, மீதம் இருக்கும் அணிகளுக்கும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் 36 பந்துகளில் 71 ரன்கள், நேஹல் வதேரா 15 பந்துகளில் 25 ரன்கள், ஷஷாங்க் சிங் 10 பந்துகளில் 19 ரன்களை குவித்தனர்.

2 கேட்ச்சை விட்ட கருண் நாயர்

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு இந்த தோல்வி மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. 265 ரன்களை அவர்களின் ஹோம் மைதானத்திலேயே கட்டுப்படுத்த முடியாதது பந்துவீச்சு படைக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கும். லுங்கி இங்கிடி காயத்தால் வெளியேறியதும் பின்னடைவே. கருண் நாயர் ஷ்ரேயாஸ் ஐயர் அடுத்தடுத்து கொடுத்த 2 கேட்ச்சை தவறவிட்டதும் துரதிருஷ்டம்தான்.

இதற்கு முன், 2024ஆம் ஆண்டு கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் 262 ரன்கள் என்ற இலக்கை பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றிகரமாக சேஸிங் செய்தது. இதுதான் டி20 வரலாற்றில் வெற்றிகரமான சேஸ்ஸிங் ஆக இருந்தது. ஆனால், பஞ்சாப் அணி தனது சாதனையையே முறியடித்து புது சாதனையை படைத்துள்ளது.

zeenews


 


Post a Comment

0 Comments