Ticker

6/recent/ticker-posts

1330 குறள்களுக்கு குறள்வடிவில் விளக்கம்-33


குறள் 163:

அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம் பேணா தழுக்கறுப் பான்.

அறநெறிச் செல்வத்தை வேண்டாதான் இங்கே பொறாமை அடைவான் தகித்து.

குறன் 164:

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின் ஏதம் படுபாக் கறிந்து.

நெறிபிறழ்ந்தால் துன்பம் வருமென் றறிந்தோர் பொறாமைச் செயல்தவிர்ப்பார் கூறு.

குறள் 165:

அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார் வழுக்கியுங் கேடீன் பது.

பொறாமை படைத்தோர்க்கு வேறுபகை உண்டோ? பொறாமையே வீழ்த்தும் உணர்.

குறள் 166:

கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉ மின்றிக் கெடும்.

கொடுப்பதைப் பார்த்துப் பொறுக்காதோர் சுற்றம் உடையுண வின்றிக் கெடும்.

குறள் 167:

அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவன் தவ்வையைக் காட்டி விடும்.

உள்ளம் பொறாமை வசப்பட்டால் செல்வமோ ஏழ்மைக்கு வாய்ப்பளிக்கும் சொல்,

(தொடரும்)


 


Post a Comment

0 Comments