
அறன் வலியுறுத்தல்
குறள் மொழி 61
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை.
குறள் எண்:36
குறள் மொழியின் பொருள் :
பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்து விடாமல். இயன்ற வழிகளில் எல்லாம் அப்போதே அறம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் அவர் செய்த அறமே அவரது இறுதிக் காலத்தில் துணை நிற்கும்.
நபிமொழி :
செல்வந்தர். வறியவர். ஏழைகள். ஆதரவற்றோர் என்ற வேறுபாடில்லாமல் அனைத்து முஸ்லிம்களுக்கும். மனித நேயப் பணிகளில் ஈடுபடுவது அனைவருக்கும் ஒரு மார்க்கக் கடமையாகும். சுவர்க்கத்தில் முதலில் நுழைபவர்கள் அறப்பணிகளில் ஈடுபடுபவர்களே.
அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) ஆதாரம் - புகாரி
(நூல் - நபிகளாரின் சமூக உறவு - பக்-84)
வெகுளாமை
குறள் மொழி 62
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்.
குறள் எண் :303
குறள் மொழியின் பொருள் :
யாரிடமும் கோபம் கொள்ளாமல் அதனை மறந்து விடுதல் வேண்டும். ஏனெனில் கோபத்தால் பல தீங்குகள் ஏற்பட்டுவிடும். ஆதலின் இணக்கமாய் இருங்கள்.
நபிமொழி:
"பிறர் குறையைத் துருவித் துருவி ஆராயாதீர்கள் ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். கோபம் வேண்டாம் அதனை மறந்து சகோதரர்களாய் இருங்கள் அல்லாஹ்வின் அடியார்களே”! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அபூஹீரைரா (ரலி). - நூல்: புகாரி 6064
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments