Ticker

6/recent/ticker-posts

டெல்லியை பொட்டலம் கட்டிய ஆர்சிபி.. 39 பந்துகளில் அபார வெற்றி!


2026 ஐபிஎல் தொடரின் 39 ஆவது போட்டி  (ஏப்ரல் 27) டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் அக்சர் பட்டேல் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. 

டெல்லி அணி 8 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்தது 
அதன்படி முதலில் டிசி (Delhi Capitals) அணி பேட்டிங் செய்தது. இதுவரை கே.எல். ராகுலுடன் தொடக்க வீரராக பதும் நிசங்காவுக்கு பதிலாக ஷஹில் பராக் என்ற புதுவீரரை டெல்லி அணி களம் இறக்கியது. ஆனால் அவர் சந்தித்த இரண்டாவது பந்திலேயே போல்டாகி ஆட்டமிழந்து வெளியேறினார். இதை அடுத்து டெல்லி அணி தொடர் சரிவை கண்டது. கே. எல். ராகுல், நிதிஷ் ரானா, சமீர் ரிஸ்வி, ஸ்டெப்ஸ், அக்சர்பட்டேல் என அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார் அசத்தல் 

இதனால் 8 ரன்களுக்கே டெல்லி அணி 6 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இதை அடுத்து இம்பேக்ட் வீரராக களம் வந்த அபிஷேக் போரல் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் சிறிது நேரம் களத்தில் நின்று ரன்களை சேர்த்தனர். 8 ரன்களில் இருந்து 43 ரண்களுக்கு உயர்ந்த டெல்லிய அணி தனது அடுத்த விக்கெட்டை இழந்தது. டேவிட் மில்லர் 19 ரண்களில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். பின்னர் கேல் ஜெமிசன் 12 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் ரன்களை சேர்த்து வந்த அபிஷேக் போரலும் 30 ரன்களில் வெளியேறினார். இறுதியில் டெல்லி அணி 16.3 ஓவர்களில் 75 கண்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. ஆர்சிபி அணி சார்பில் அதிகபட்சமாக ஜோஸ் ஹேசில்வுட் 4 விக்கெட்களையும் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்களையும் கைப்பற்றி அசத்தினர

ஆர்சிபி அணி அபார வெற்றி 

இந்த நிலையில் 76 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி அந்த இலக்கை 6.3 ஓவர்களிலேயே அடித்து அசத்தியது. தொடக்க வீரரான ஜேக்கப் பெத்தேல் மட்டும் 20 ரன்கள் ஆட்டம் இழந்தார். விராட் கோலி 23 ரன்கள், படிக்கள் 34 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் இத்தொடரில் ஆர்சிபி அணி தனது ஆறாவது வெற்றியை கைப்பற்றியது.

2026 ஐபிஎல் புள்ளிப்பட்டியல்

புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி அணி இரண்டாவது இடத்தில் 12 புள்ளிகளுடன் உள்ளது. மறுபுறம் டெல்லி அணி தற்போது வரை வெறும் மூன்று வெற்றிகளை பெற்று 6 புள்ளியுடன் 7 வது இடத்தில் உள்ளது. முதல் நான்கு இடங்களில் ஆர்சிபி அணி உடன் பஞ்சாப், ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் உள்ளன. கடைசி இடத்தில் லக்னோ அணி உள்ளது. 

டெல்லி அணியின் பிளே ஆப் வாய்ப்பு 

டெல்லி அணி 8 போட்டிகளில் விளையாடி உள்ள நிலையில், அவர்களுக்கு இன்னும் 6 போட்டிகள் மீதும் உள்ளன. அதில் அவர்கள் 5 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. டெல்லி அணிக்கு அடுத்தடுத்த போட்டிகளாக ராஜஸ்தான், சென்னை, கொல்கத்தா மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

ஆர்சிபி அணி 

ஆர்சிபி அணிக்கும் இன்னும் 6 போட்டிகள் உள்ளன. இதில் அந்த அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்றாலே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று விடும். கடந்த 2025 ஐபிஎல் தொடரை ஆர்சிபி வென்ற நிலையில், தற்போது அதே முனைப்புடன் கோப்பையை நோக்கி முன்னேறி வருகிறது. அடுத்தடுத்த போட்டிகளில் ஆர்சிபி அணி குஜராத், லக்னோ, மும்பை, கொல்கத்தா, பஞ்சாப், ஹைதராபாத் உள்ளிட்ட அணிகளுடன் விளையாட இருக்கிறது. 

zeenews


 


Post a Comment

0 Comments