Ticker

6/recent/ticker-posts

இங்கிலாந்தின் விஸ்டன் விருது: 6 இந்தியர்கள் தேர்வு.. யார் யார் பாருங்க!


இங்கிலாந்தை சேர்ந்த விஸ்டன் கிரிக்கெட் இதழ் சிறந்த வீரர்களை தேர்வு செய்து கவுரவிக்கிறது. 
 
விஸ்டன் கிரிக்கெட் இதழ் இங்கிலாந்தின் நூற்றாண்டு கால பாரம்பரிய இதழாக இருக்கிறது. இந்த இதழை கிரிக்கெட்டின் பைபிள் என வர்ணிக்கப்படுகிறது. 

இங்கிலாந்தை சேர்ந்த விஸ்டன் கிரிக்கெட் இதழ் ஆண்டுதோறும் சிறந்த கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து கவுரவிக்கிறது. இங்கிலாந்தில் நடக்கும் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் 5 வீரர்களை கண்டெடுத்து அவர்களின் பெருமையை சுட்டுக்காட்டி தனது இதழில் வெளியிட்டு புகழாரம் சூட்டும்.   

அந்த வகையில், கடந்த ஆண்டு இங்கிலாந்திக்கு எதிராக சிறப்பாக விளையாடிய இந்திய வீரர்களான சுப்மன் கில், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ் ஆகியோரை தேர்வு செய்து உள்ளனர். மேலும், இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய ஹசீப் ஹமீதை தேர்வு செய்துள்ளனர்.   

இங்கிலாந்தில் மட்டுமல்லாமல் உலக கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடிய வீரர்களை விஸ்டன் இதழ் கவுரவிக்கிறது. அதன்படி, ஆஸ்திரேலியா வீரர் மிட்செல் ஸ்டார்க், இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.   

அதேபோல் டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடியதற்காக அபிஷேக் சர்மா தேர்வாகி உள்ளார். மேலும், விஸ்டன் இதழின் தனிநபர் விருதும் சுப்மன் கில்லுக்கு கிடைத்துள்ளது.   
  
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு ஜுன் மாதம் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடியது. இத்தொடரில் இங்கிலாந்து மற்றும் இந்தியா அணி தலா 2 போட்டிகளில் வென்ற நிலையில் ஒரு போட்டி டிராவானது.   

இத்தொடரில் ரிஷப் பண்ட் இரண்டு சதங்களை அடித்தார். சுப்மன் கில் ஒரு இரட்டை சதம் மற்றும் 3 சதங்களை அடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.   

zeenews  


 


Post a Comment

0 Comments