Ticker

6/recent/ticker-posts

சமையலறைப் புரட்சி: செரிமானத்தை அறிந்து உணவளிக்கும் AI


சீனாவில் பல உணவகங்கள் இயந்திர மனிதக் கருவிகளைப் பயன்படுத்துகின்றன.

AI (செயற்கை நுண்ணறிவு) உதவியோடு அவை இயங்குகின்றன.

இதுவரை சமைப்பதற்கும் பரிமாறுவதற்கும்தான் அவை உதவின.

ஆனால் இப்போது அவை...

🤖 ஆர்டர் எடுக்கின்றன

🤖  வாடிக்கையாளரின் வாழ்க்கைமுறை, உணர்வுகள், செரிமான சக்தி ஆகியவை குறித்த தகவல்களைச் சேகரிக்கின்றன

🤖 பருவநிலைக்கு ஏற்ப ஆரோக்கியத்தைப் பார்த்து உணவு வகைகளைப் பரிந்துரைக்கின்றன 

🤖 சுத்தம் செய்கின்றன

🤖 வறுக்கும்போது, பாத்திரத்தைச் சுழற்றும்போது சமையல்காரர்களின் அசைவுகளைப் பின்பற்றுகின்றன

ஹாங்சோவின் (Hangzhou) ஸெஜியாங் (Zhejiang) மாநிலத்தில் சில உணவகங்கள் இத்தகைய கருவிகளைப் பயன்படுத்துகின்றன.

சுமார் 100 வகை உணவு வகைகளைச் சமைக்க இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது.

அவற்றில் ஒன்றான 24 Jieqi Robot  உணவகம் எட்டு இயந்திரங்களைப் பயன்படுத்துகிறது.

சமையலறைப் பணியாளர்களின் மொத்த வேலைச்சுமையில் 60 விழுக்காட்டை இயந்திரம் பகிர்ந்துகொள்கிறது.

உணவின் விலை குறைவதற்கு இவை உதவுவதாக உணவக உரிமையாளர் கூறினார்.

seithi


 


Post a Comment

0 Comments