
ரெட் நோட்டீஸ் (Red Notice) அறிவித்தலுக்கு அமைவாக இலங்கை பொலிஸ் அதிகாரிகள் மற்றும் இந்தோனேசிய புலனாய்வாளர்கள் இணைந்து கைது செய்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக, அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 8 கைபேசிகளிலிருந்து பல முக்கிய தகவல்கள் வெளிவந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தொலைபேசிகளை ஆய்வு செய்ததில், பல அரசியல்வாதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி உரையாடல்கள் கண்டறியப்பட்டுள்ளன.
மேலும், அந்த 8 கைபேசிகளிலும் 8,841 தொலைபேசி அழைப்புகள், 3,26,671 புகைப்படங்கள், 5,039 வீடியோ காட்சிகள் மற்றும் 1,101 குரல் பதிவுகள் (Recordings) காணப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விசாரணைகளின் போது கெஹெல்பத்தர பத்மே, சிறைச்சாலை அதிகாரிகள் சிலர் மற்றும் 09 அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்துள்ளமை தெரியவந்துள்ளது. இதற்கு மேலதிகமாக, 20 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் 07 நடிகைகள் மற்றும் மாடலிங் கலைஞர்களுடன் அவர் பேணிய தொடர்புகள் குறித்தும் பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்டதன் பின்னர் அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார். நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், தற்போது அவர் பூஸா சிறைச்சாலையின் சிறப்புப் பிரிவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
lankatruth

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments