
தொகுதி மறுவரை செய்தால் தமிழ்நாட்டின் தொகுதிகள் எண்ணிக்கை குறையும் என்றும் மத்திய அரசு அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டால் மிகப்பெரிய போராட்டத்தை தமிழ்நாடு கையில் எடுக்கும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், மக்கள் தொகையை கட்டுப்படுத்தி சாதனைப்படுத்திய தமிழ்நாட்டிற்கு தொகுதி மறுவரை தண்டனையா? தமிழ்நாட்டின் வாசல் வரை வந்துள்ள பேராபத்தை தடுத்து நிறுத்துவோம். நாளை மறுநாள் நாடாளுமன்றம் கூடவில்லை, வலுக்கட்டயமாக கூட்டப்படுகிறது.
இந்த நாடாளுமன்ற கூட்டத்தில் தொகுதி மறுவரை கொண்டு வரப்பட்டால் தமிழ்நாடு முழு அளவிலான போராட்டத்தில் ஈடுபடும். தேர்தல், ஆட்சி அதிகாரம் எங்களுக்கு 2 ஆம் பட்சம் தான். கொள்கையும், சுயமரியாதையும் தான் முக்கியம். தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிடம் எந்த ஆலோசனையும் கேட்காமல் மத்திய அரசு செயல்படுத்த முயற்சி மேற்கொள்கிறது.
தொகுதி மறுவரையை மத்திய அரசு கொண்டு வந்தால் இதுவரை கண்டிராத தமிழ்நாட்டை மத்திய அரசு பார்க்கும். 50, 60-களில் இருந்த பழைய திமுகவை மீண்டும் பார்க்க வேண்டியிருக்கும் என்றும் முதல்வர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments