Ticker

6/recent/ticker-posts

IPL 2026:சேப்பாக்கத்தில் ‘சிஎஸ்கே’ அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தி அபார வெற்றி..!


இன்றிரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அரங்கேறும் 22வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியை தொடரும் வேட்கையுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது.

சிஎஸ்கே நடப்பு சீசனில் 4 தோல்வி, 1 வெற்றியையும் பதிவு செய்துள்ளது. அதேசமயம், நடப்பு சீசனில் இன்னும் வெற்றிக்கணக்கை தொடங்காத ஒரே அணி கொல்கத்தா அணி தான்.

இந்நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில், 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்களை குவித்தது.

அதனை தொடர்ந்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய கொல்கத்தா அணி, ஆரம்பம் முதலே வெற்றிக்காக கடுமையாக போராடிய போதிலும் இறுதியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கேவிடம் தோல்வியை தழுவியது.

இந்த தோல்வியின் மூலம் கொல்கத்தா அணி இதுவரை விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வியை தழுவி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

kalkionline


 


Post a Comment

0 Comments