
மழலைக் கண்ணே
மெல்லிசை காற்றே
கை கூப்பி நான் அழைத்திட
சிரித்திடு தடவி
அணைத்திடுவேன்.
என் செல்லக் களியே
உன் ஒரு சொல் தான்
இன் உலகமடி புவியே
துள்ளித் துள்ளி
தரையில் வரைந்த
பாசச்சுவடு காத்திருக்கிறதோ
கண்ணே என்னைக் காத்து.
பாலூட்டிப் பாடி
தொட்டிலிலே ஆடி
மண்ணெல்லாம் ஊர்ந்து
மாலை வரை விளையாடி.
கைகள் இரண்டையும்
புறா போல் காட்டி
தூக்கம் துரத்தி விளையாடுவோம்
வாம்மா என் மழலைக் கண்ணே.
என் இதயம் ஓடுது உன் சிரிப்போடு
தூக்கம் வந்தால் என் மார்பிலே
தூங்கம்மா சின்ன மயிலே
மெல்லமெல்ல நெஞ்சோடு
தாலாட்டுகிறேன் தாயாக நானம்மா.
ஆர் .எஸ் . கலா

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments