Ticker

6/recent/ticker-posts

"தகவல் பரிமாற்றமே... பேச்சுவார்த்தை அல்ல": ஈரான்


அமெரிக்காவுடன் நேரடியாகவோ வட்டார நட்பு நாடுகள் வழியாகவோ தகவல் பரிமாறிக் கொண்டிருப்பதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அபாஸ் அராக்ச்சி (Abbas Araghchi) தெரிவித்துள்ளார்.

ஆனால் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை இடம்பெறவில்லை என்றார் அவர்.

மத்திய கிழக்குக்கான அமெரிக்கத் தூதர் ஸ்டீவ் விட்கோஃபிடமிருந்து (Steve Witkoff) முன்னைப் போலவே தகவல்கள் கிடைத்துள்ளன.

அதற்காக இருதரப்பும் நேரடிப் பேச்சில் ஈடுபடுவதாகச் சொல்ல முடியாது என்று திரு அராக்ச்சி கூறினார்.

அமெரிக்காவின் 15 அம்சப் போர் நிறுத்தப் பரிந்துரைக்கு ஈரான் இதுவரை பதிலளிக்கவில்லை என்று அவர் சொன்னார்.

போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் ஈரானின் நிபந்தனைகள் தெளிவாய் உள்ளன; மீண்டும் தாக்குதல் நடத்தப்படாது என்ற உத்தரவாதமும் மோதலில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடும் பெற ஈரான் விரும்புவதாகத் திரு அராக்ச்சி கூறினார்.

seithi


 


Post a Comment

0 Comments