Ticker

6/recent/ticker-posts

ஈரான் இதுவரை பேசுவதற்கு யாரையும் அனுப்பவில்லை


அமெரிக்காவுடன் அமைதிப் பேச்சு நடத்த ஈரானின் பிரதிநிதிகள் யாரும் இதுவரை பாகிஸ்தானுக்குச் செல்லவில்லை.

ஈரானின் தேசியத் தொலைக்காட்சி அந்தத் தகவலைத் தெரிவித்தது.

அமெரிக்கத் துணையதிபர் JD வான்ஸ் புறப்படத் தயார் என்று அமெரிக்கா சொல்கிறது.

ஈரானும் அமெரிக்காவும் இரண்டு வாரச் சண்டைநிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொண்டிருந்தன.

உடன்பாட்டை மீறியதாக இருத்தரப்பும் ஒன்றை ஒன்று குறை கூறுகின்றன.

அதிகப்படியான கோரிக்கைகளை முன்வைத்த அமெரிக்கா அதிலிருந்து பின்வாங்காமல் இருப்பதாக ஈரான் குறிப்பிட்டது.

இந்நிலையில் ஒப்பந்தம் நாளை காலாவதியாகிறது.

அமைதி ஒப்பந்தத்தை நீட்டிக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறினார்.

பேச்சுவார்த்தை நடத்த ஈரான் தரப்பு பாகிஸ்தானில் இருக்கவேண்டும் என்று அவர் PBS செய்தியிடம் கூறினார்.

இருதரப்பும் பாகிஸ்தானில் சந்திக்க சம்மதித்ததாகவும் ஒப்பந்தம் காலாவதியானால் பல தாக்குதல்கள் நடக்கும் என்றும் அதிபர் டிரம்ப் எச்சரித்தார்.

ஈரானுடன் உடன்பாடு எட்டப்படும் வரை ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கா தொடர்ந்து முற்றுகையிடும் என்றார் அவர்.

seithi


 


Post a Comment

0 Comments