
துறைமுகங்களை அமெரிக்கப் படைகள் முற்றுகையிட்டுள்ள நிலையில், பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடியாது என்று ஈரான் தெரிவித்தது.
ஈரானுடனான இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தை, அடுத்த 3 நாட்களில் தொடங்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஈரான்-அமெரிக்கா இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், இரு நாடுகளுக்கும் இடையேயான இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் நேற்று முன்தினம் நடைபெறும் என்று கூறப்பட்டது.
ஆனால், துறைமுகங்களை அமெரிக்கப் படைகள் முற்றுகையிட்டுள்ள நிலையில், பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடியாது என்று ஈரான் தெரிவித்தது.
இந்நிலையில், அடுத்த சுற்று பேச்சுவார்த்தை, 72 மணிநேரத்தில் இஸ்லாமாபாத்தில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக பாகிஸ்தான் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பிடம் கேட்டபோது, இதற்கு வாய்ப்பு இருப்பதாக அவர் பதிலளித்துள்ளார்.
அதேநேரம், அடுத்த சுற்று பேச்சுவார்த்தையில் பங்கேற்பது குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை என்று ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகேய் தெரிவித்துள்ளார். நல்ல எண்ணத்துடனும், தீவிர தன்மையுடனும் முதல் சுற்று பேச்சுவார்த்தையில் தாங்கள் பங்கேற்ற நிலையில், உரிய கவனத்தை அமெரிக்கா செலுத்தவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.
இதனிடையே, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரானில் போராட்டத்தில் ஈடுபட்டதாக கைதுசெய்யப்பட்ட 8 பெண்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதை தனது கோரிக்கையை ஏற்று ஈரான் ரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். 4 பேர் உடனடியாக விடுவிக்கப்படுவார்கள் என்றும், 4 பேர் ஒரு மாத சிறை தண்டனையை அனுபவிப்பார்கள் என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments