Ticker

6/recent/ticker-posts

அர்ச்சுனா எம்.பிக்கு விளக்கமறியல் உத்தரவு


தமது தனிப்பட்ட பாதுகாப்பு துப்பாக்கியை காட்டி பெண் ஒருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தமது தனிப்பட்ட பாதுகாப்பு துப்பாக்கியை காட்டி பெண் ஒருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், இன்று (27) இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு வாக்கு மூலம் அளிக்க அர்ச்சுனா இராமநாதனை அழைத்து, வாக்குமூலங்களை பதிவு செய்த பின்னர், அவரை கைது செய்தனர்.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் தாக்குதலுக்கு உள்ளான இரு நபர்களில் பெண்ணொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில், மற்றைய நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

jvpnews


 


Post a Comment

0 Comments