
சீனாவின் ஹங்சோ (Hangzhou) நகரில் ஆரம்ப நிலை புற்றுநோயைக் கண்டறியும் புதிய கருவி உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரு துளி ரத்தத்தைக் கொண்டு புற்றுநோய் உள்ளதா என்பதைக் கண்டறிய அது பயன்படுகிறது.
வழக்கமான பரிசோதனையைவிடச் சுமார் 10,000 மடங்குத் துல்லியமாக அது நோய் இருக்கிறதா என்பதைச் சொல்லிவிடும்.
புற்றுநோய்ச் சோதனைக் கருவிகள் பெரிய குளிர்சாதனப் பெட்டியின் அளவில் இருப்பது வழக்கம்.
இப்போது Q-modulated refractometric sensing எனும் சாதனத்தைக் கொண்டு கையடக்கக் கருவியை உருவாக்கியுள்ளது ஆய்வுக் குழு. வீட்டிலேயே அதைப் பயன்படுத்த முடியும்.
சோதித்துப் பார்த்தபோது, ஆரம்ப நிலை நுரையீரல் புற்றுநோயைப் புதுக்கருவி 94.9 விழுக்காட்டுத் துல்லியத்துடன் சொல்லி இருக்கிறது.
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






0 Comments