Ticker

6/recent/ticker-posts

ராஜகுமாரியின் சுயம்வரம்-126


அனைவரும் கூறி முடித்ததுமே அவனோட விலாசத்தையும் அவன் கூறினான் எல்லோரும் அரண்மனை மண்டபம் நோக்கிப் புறப்படத் தயாரானார்கள் அப்போது மரநிழலில் காற்று வாங்கிக் கொண்டே கதை பேசிய குமரன் ஊர் மக்களும் எழுந்து கொண்டார்கள்  தூரமாக அரண் மனை வைத்தியரும் வருகை தருவது தெரிந்தது மெய்க்காப்பாளர்களும் ஒருவர் பின் ஒருவராக வந்து கொண்டு இருந்தார்கள்  நாட்டாமையும் துணைவியாரும் மண்டபம் முன்பே இருக்கையில் இருக்க அவர்கள் அருகே சில பணிப்பெண்களும் கூடி நின்றார்கள். 

அரண்மனை மண்டபம் முன் போய் அனைவரும் ஒன்று கூடும் வேளை மந்திரியும் சில பணி ஆளர்களும் இணைந்தே வருபவை தெரிந்தன அனைவரும் அமைதியோடு காத்திருக்க மந்திரியும் வந்து விட எல்லோரும் உள்ளே நுழைந்து அமர்ந்து கொண்டனர் அப்போது மந்திரி சில பணிப் பெண்ணை அழைத்து இங்கே வருங்கள் இவ்விடம்  இதில் உள்ள அனைத்தையும் கொண்டு வையுங்கள் என்று கூறி ஒரு காகிதத்தைக் கொடுத்தார் அதை மரியாதையோடு பெற்றுக் கொண்ட பெண் வேகமாக வெளியேறிப் போனாள்.

சற்று நேரத்தில் அழகிய வேலைப்பாடு கொண்ட விரிப்போடு ஆறு ஏழு பெண்கள் வந்தார்கள் அதை தரையிலே விரித்து விட்டு மீண்டும் சென்றார்கள் அந்த விரிப்பின் அழகு மிகமிக அருமை அங்கே அமர்ந்து இருந்தோர் எல்லாம் அதைப் பார்த்து ரசித்த வாறே இருந்தார்கள் போன வேகத்திலே ஏதேதோ தட்டுக்களைக் கொண்டு வந்து வைத்துக் கொண்டே இருந்தார்கள் என்னவாக இருக்கும் இவை எல்லாம் மூடி இருக்கின்றதே ஆகையால் பார்த்திட முடியவில்லை.

ஆவலோடு ஆர்வமாகப் பார்த்துக் கொண்டு இருக்க முரசொலி கேட்டது அதாவது அறியத் தருவது எதுவெனில் நம் இளைய இளவரசியாரும் அரசியும் அரண்மனை நோக்கி வருகை தருகின்றார்கள் என்று கூறி மீண்டும் முரசொலி எழுப்பினான் காவலன் அதே சமையம் படைத்தளபதியும் தன் படையின் ஒரு சிலரோடு யானையில் வந்து கொண்டு இருந்தான் முன்பாக அவனைத் தொடர்ந்து அரண்மனைப் புலவரும் நாட்டியத் தேவதைகளும் வந்தார்கள் அழகிய வேடங்களோடு.

(தொடரும்)

 


Post a Comment

0 Comments