
அரங்கமே அதிர்ந்தது கை தட்டல் அப்போது தலை தாழ்த்தி அதை ஏற்றுக் கொண்டாள் அருமை அருமை வாழ்த்துகள் தாயி என்றார் மந்திரி. ஆம் ரொம்ப நல்லா இருந்தது மா நீ வாழ்க வளமோடு என்று மனம் திறந்து நாட்டாமையும் பாராட்டினார் அரசி சிரித்து விட்டுக் கூறினார் நாங்கள் பல முறை அமிழ் அமுதை நந்திகாவிடம் இருந்து அருந்தி இருக்கின்றோம் இன்றைய ஏற்பாடு செய்தோம் உங்க மனதையும் வென்று விட்டாள் நந்திகா.
இவள் யார் தெரியுமா? நம் அரண்மனை வைத்தியரின் பேத்தி இங்கு இவளை நான் இப்போது அழைத்தமைக்கு ஓர் காரணம் உண்டு நம் மருத்துவர் தன்னோட பேத்தியை தாங்களின் மகன் குமரகுருவுக்கு மணம் முடித்திட ஆசைப் பட்டார்.
அதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என நம்பி இந்த ஏற்பாடு செய்தோம் உங்கள் விருப்பைக் கூறுங்கள் கட்டாயப் படுத்த மாட்டோம் நந்திகா இலக்கிய ஆசிரிகை எங்களது அரசி மாணவர்களுக்கு நீங்கள் ஆசைப்பட்டு மணம் முடித்தால் அவரை உங்க ஊர் மக்களுக்குக் கற்பிக்கும் ஆசிரிகையாக அமர்த்தலாம் நான் தடையில்லை உங்களோட சம்மதம் எவையென சபையிலே கூறுங்கள்.
என அரசி கூறியதும் அரண்மனை மருத்துவரும் கூறினார் ஆம் ஐயா குமரா உன்னிடம் உள்ள திறமை என்னை அவ்வாறு ஆசைப் பட வைத்தது என் பேத்தியை கரம் பற்றிட உமது குடும்பத்தோடு இணைந்து உன் விருப்பையும் கூறும் என்றார் அதைக் கேட்ட குமரன் தந்தை தாயைப் பார்க்க அவர்கள் சற்று சிந்தித்து விட்டு தலை அசைத்தனர் குமரன் பெண்ணைப் பார்த்தான் அவள் தைரியமாகவே கூறினாள் தாங்கள் மனதளவில் விருப்பு இருப்பின் ஏற்றுக்கொள்ள. முன் வாருங்கள் தலைவா நான் வருந்த மாட்டேன் உங்கள் வெறுப்புக் கண்டு என்றாள் அந்த வார்த்தை கேட்டதுமே அவளது தைரியத்தைக் கண்டு மறு பேச்சுப் பேசாமல் பிடித்திருக்கிறது என்று உரைத்தான் குமரன் பெற்றோர்கள் உட்பட மருத்துவ நண்பர்கள் முகமும் மலர்ந்தது
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments