Ticker

6/recent/ticker-posts

1330 குறள்களுக்கு குறள்வடிவில் விளக்கம்-37


புறங்கூறாமை

குறள் 181:

அறங்கூறா னல்ல செயினும் ஒருவன் புறங்கூறா னென்றல் இனிது.

அறவழி போற்றவில்லை என்றாலும் நாளும் புறங்கூறி வாழ்தலோ தீது.

குறள் 182:

அறனழீஇ யல்லவை செய்தலின் தீதே புறனழீஇப் பொய்த்து நகை.

அறமற்ற வாழ்வினும் நேரில் புகழ்ந்தும் மறைவில் புறம்பேசல் கேடு.

குறள் 183:

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல் அறங்கூறும் ஆக்கந் தரும்.

மறைவில் புறம்பேசி நேரில் புகழ்ந்து கடைந்தெடுத்த கோழையாய் வாழ்கின்ற வேடம் நடைப்பிணமாய் மாற்றும் உணர்.

குறள் 184:

கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க முன்னின்று பின்னோக்காச் சொல்.

கண்ணெதிரே நேர்படப் பேசு தவறில்லை! பின்னால் புறங்கூறல் தீது.

குறள் 185:

அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும் புன்மையாற் காணப் படும்.

புறம்பேசும் பண்புள்ளோன் என்றும் அறத்தைப் புறக்கணித்து வாழ்வோன் அறி.

(தொடரும்)

 


Post a Comment

0 Comments