
குமரன் பிடித்திருக்கு என்று கூறிய வார்த்தை தான் நந்திகாவை வெட்கப்படச் செய்தது சற்று சிவந்தது அவளது வதனம் மெதுவாய் தலை சாய்த்துக்
கொண்டு விரல்களால் ஏதோ கிறுக்கிக் கொண்டு இருந்தாள் .
அரண் மனை வைத்தியர் எழுந்து வந்து குமரனைக் கட்டி அணைத்துக் கண்ணீராலே நன்றி உரைத்தார் . மகாராணியும் இளவரசியும் வாழ்த்துக்கள் நந்திகா எனக் கூறவே நந்திகா எழுந்து கை கூப்பி நின்றாள்.
அரசி அமருமாறு கூறினார் உடனே மந்திரி மகாராணியைப் பார்த்து அப்போ நாம் நம் கடமைகளை நிறைவேற்றி குமரனை வழி அனுப்பி வத்திடுவோம் அரசே அதற்கான வேலையை ஆரம்பிக்கலாமா?
என்று கேட்டார் ம்ம்ம்ம் ஆகட்டும் மந்திரியாரே என்றார் மகாராணி .
உடனே மந்திரி எழுந்து வந்து பணிப்பெண் இருவரை அழைத்து அந்த மாலைகள் இருக்கும் தட்டத்தை தூக்கிக் கொள்ளுங்கள் அதில் ஒன்றை அரண்மனை வைத்தியர் அருகே கொண்டு போய் நில்லுங்கள் அடுத்த தட்டை நாட்டாமை அருகே கொண்டு செல்லுங்கள் என்றார்.
அவர் கூறிய வேலையைப் பணிப்பெண் இருவரும் செய்தார்கள் .
குமரா வாரும் என் அருகே என மந்திரி அழைத்தார் குமரனும் உடனே அவர் அருகே போய் நின்றான்.
நந்திகா நீயும் வா என்றார்.அவளும் எழுந்து சென்றாள்.
மந்திரி இரு வீட்டாரும் உங்கள் கரங்களால் மாலையை எடுத்துக் கொடுங்கள் என்றார் மந்திரி அவர்கள் இருவரும் புன்னகையோடு மாலையைக் கொடுத்திட குமரன் நந்திகா பெற்றுக் கொண்டனர்.
சரி இருவரும் அரசியின் முன் சென்று மாலையை மாற்றிக் கொள்ளுங்கள் எனக் கூறினார் மந்திரி இருவரும் அவரின் ஆலோசனைக்கு தலை அசைத்து விட்டு அரசி முன் போய் நின்றார்கள் .
உடனே மகாராணி மாற்றுங்கள் என்று புன்னகைத்தார்
இருவரும் மாலை மாற்றியதும் வாழ்த்து ஒலி கொடுத்து கரங்களை அனைவரும் தட்டினார்கள்.
அப்போது அரசி எழுந்து அவர்கள் அருகே வந்து இருவரையும் ஆசீர்வாதம் செய்து கூறினார் பெரியோரிடம் ஆசி பெறுங்கள்
என்று இருவரும் ஒன்றாக. சபையோரைப் பார்த்து வணங்கி ஆசி பெற்றனர் .
(தொடரும்)
ஆர்.எஸ் .கலா

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments