
குறன் 186:
பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளுந் திறன்தெரிந்து கூறப் படும்.
பிறரைப் பழித்துப் புறம்பேசு வோனைப் பிறரும் குறைசொல்வார் கூறு.
குறன் 187:
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர்.
அகங்குளிர சேர்த்துவைக்கும் பண்பற்றோர் நாளும் புறம்பேசி தாழ்வார் கலைத்து.
குறள் 188:
துன்னியார் குற்றமுந் தூற்றும் மரபினர் என்னைகொல் ஏதிலார் மாட்டு.
நண்பரைப் பற்றிக் குறைசொல்வோர் என்னதான் அள்னியரைக் கூறமாட்டார் கூறு?
குறன் 189:
அறனோக்கி யாற்றுங்கொல் வையம் புறனோக்கிப் புன்சொ லுரைப்பான் பொறை.
புறம்பேசு வோரைச் சுமத்தலும் இங்கே அறமென்றே ஏற்கும் நிலம்.
குறள் 190:
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின் தீதுண்டோ மன்னு முயிர்க்கு
மற்றவர் குற்றமுடன் தன்குற்றம் ஒப்பிட்டால் எப்போதும் இங்கே புறங்கூறி வாழமாட்டோம்! துன்பம் விலகும் உணர்.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments