Ticker

6/recent/ticker-posts

1330 குறள்களுக்கு குறள்வடிவில் விளக்கம்-34


குறள் 168:

அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்தீயுழி உய்த்து விடும்.

பொருள்: 

பொறாமை எனப்படும் பாவி, ஒருவனுடைய செல்வத்தை அழிப்பதோடு மட்டுமல்லாமல், அவனைத் தீய வழியில் செலுத்தி நரகத்திலும் தள்ளிவிடும்.

குறள் 169:

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்கேடும் நினைக்கப் படும்.

பொருள்: 

பொறாமை கொண்ட நெஞ்சம் உடையவனின் செல்வமும், பொறாமை இல்லாத நல்லவனுடைய வறுமையும் (ஏன் இப்படி எனச் சான்றோர்களால்) ஆராயப்படும்.

குறள் 170:

அழுக்கற் றகன்றாரும் இல்லையஃ தில்லார்பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.

பொருள்: 

பொறாமை கொண்டு வாழ்ந்தவர்களில் உயர்ந்தவர்கள் யாருமில்லை; அதேபோல், பொறாமை இல்லாதவர்களில் தாழ்ந்தவர்களும் யாருமில்லை.

(தொடரும்)

 


Post a Comment

0 Comments