Ticker

6/recent/ticker-posts

இனியவை நாற்பது-14


இனியவை நாற்பது-27

தானங் கொடுப்பான் தகையாண்மைமுன் இனிதே
மானம் படவரின் வாழாமை முன்இனிதே
ஊனங்கொண் டாடார் உறுதி உடையவை
கோள்முறையாற் கோடல் இனிது.

விளக்கம்:

எல்லாவித உதவிகளையும் செய்பவனின் குணம் இனிது. 
மானம் இழந்த பின் வாழால் இருப்பது மிகவும் இனிது. 
அடுத்தவர்கள் பற்றி குற்றம் குறை கூறாமல் இருக்கும் உறுதி மிக இனிது. 
நல்லவை எதையும் முறைப் படிப் பெறுதல் இனிது.

இனியவை நாற்பது-28

ஆற்றாமை யாற்றென் றலையாமை முன்இனிதே
கூற்றம் வரவுண்மை சிந்தித்து வாழ்வனிதே
ஆக்க மழியினும் அல்லவை கூறாத
தேர்ச்சியின் தேர்வினியது இல். 

விளக்கம்:

ஒரு வேலையை செய்யத் தெரியாத நபரிடம், அந்த  வேலையைக் கொடுக்காமல் இருப்பது இனிது. 
மரணத்தைத் தவிர்க்க முடியாது என்பதை உணர்ந்து வாழ்வது இனிது. 
செல்வத்தை இழந்தாலும் நல்லவை  இல்லாத சொற்களைக் கூறாமல் இருப்பது இனிது.

(தொடரும்)


 


Post a Comment

0 Comments