
இனியவை நாற்பது 31.
அடைந்தார் துயர் கூரா ஆற்றல் இனிதே;
கடன் கொண்டும் செய்வன செய்தல் இனிதே;
சிறந்து அமைந்த கேள்வியர் ஆயினும், ஆராய்ந்து
அறிந்து உரைத்தல் ஆற்ற இனிது.
விளக்கம்:
நம்மை நாடி வந்தவர்களின் துயரைத் துடைப்பது இனிது.
செய்ய வேண்டிய செயல்களை கடன் வாங்கியாவது செய்வது இனிது.
மிகச் சிறந்த அறிவுடையவர்களாக இருந்தாலும், ஒரு பொருளை நன்றாக ஆராய்ந்த பின் அதைப் பற்றி பேசுவது இனிது .
இனியவை நாற்பது 32
சுற்றறிந்தார் கூறுங் கருமப் பொருள்இனிதே
பற்றமையா வேந்தன்கீழ் வாழாமை முன்இனிதே
தெற்றென இன்றித் தெளிந்தாரைத் தீங்கூக்காப்
பத்திமையிற் பாங்கினியது இல்.
விளக்கம்:
கற்று அறிந்தவர்கள் கூறும் கருமப் பயன் இனிது.
யாரிடமும் பாசத்துடன் வாழாத மன்னன் கீழ் வாழாமல் இருப்பது இனிது.
தெரியாமல் கெடுதல் செய்தவர்களுக்குக் கூட பதிலுக்கு தீங்கு எதுவும் செய்யாமல் அன்புடன் இருப்பது இனிது.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments