
அமரும் நந்திகா உன் வாழ்வு செழிக்கட்டும் வாழ்த்துக்கள் என்றாள் ராஜகுமாரி அவரைத் தொடர்ந்து ஆமாம் இலக்கியப் பெண்ணே உன் வாழ்வு இலக்கணம் போல் புகழ்பெற எனது ஆசீர்வாதம் என்றும் உண்டு நீ அமரும் விரிப்பிலே என்றார் அரசி அவர்கள் இருவரும் கூறியமைக்கு இலக்கணத் தமிழிலே நன்றியுரைத்த பெண் மெதுவாக அமர்ந்து கொண்டாள். அவள் குரலின் இனிமை உண்மையிலே வியர்ப்புக் கொடுத்தது.
எங்கே தாரகைகளே ஆரம்பியுங்கள் நடனக்கலையை என்றார் அரசி ஆரம்பம் ஆனது ஆட்டம் அவை முடிந்திட புகழ் கூறும் புலவர்கள் வந்து புகழ் பாடி அமர்ந்திட இறுதியாக அரசி கூறினார் இலக்கியத் தேவதையே நீ கூறும் ஓர் கவிதையடி மகளே என்று நந்திகாவைப் பார்த்து அப்போதுதான் நந்திகா தன் முகத்திரை நீக்கினாள். அடடா ரதி வர்மன் வர்ணித்த சிலை இவளோ என்று எண்ணம் தோன்றிடச் செய்தது பார்ப்போர் கண்ணுக்கு அழகு மேருகூட்டாத வதனம் ஆனால் அழகின் இருப்பிடம் அந்த முகம்.
இளவரசி ராஜகுமாரியோடு ஒப்பிடகூடிய அழகி அவள் எளிமையான உடை எளிமையான முகப்பூச்சி ஆனால் எழில் பொங்கும் அழகி ஆண்கள் கண்கள் ஈயாய் மொத்திடும் பலாப்பழம் அவள் என்று கூறலாம்.திரை நீக்கி எழுந்தவள் கவி கூறத் தொடங்கினாள் மெய் மறந்தன சபை.
முத்தமிழ் கொண்டு முதல் வணக்கம்
முழுமனதோடு உரைக்கின்றேன்.
சித்தமெல்லாம் பரந்து ஓடிடவே
சிந்தனை வார்த்தையைத் திணிக்கின்றேன்.
சந்தம் கொண்டு பாடல் பாடிட எண்ணமில்லை.
சொந்தமென்று கூடி வாழ்ந்திட
ஏங்கிடும் பிள்ளை.அரங்கிலே
அரசி அருகே இளவரசி அள்ளிக்
கொடுத்திடும் கரங்கள் அன்பின்
சுரங்கள். இவையிறுக்க இங்கு
ஏது கலக்கங்கள் தரையிலே
உள்ளோருக்கும் என்னை
தலை நிமிர வைத்த என்
மூத்தோருக்கும் அகம் மகிழ்ந்து
உரைத்திடுவேன் நன்றிகள்
வாழ்க தமிழ் வாழிய அரசி வளரட்டும்
ஆட்சி இதுவே புகழ்ச்சி நன்றி நன்றி
எனக் கூறி அமர்ந்தாள் தரையே.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments