Ticker

6/recent/ticker-posts

இனியவை நாற்பது-18


இனியவை நாற்பது.35

ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரிதல் முன்இனிதே
முற்றான தெரிந்து முறைசெய்தல் முன்இனிதே
பற்றினலாய்ப் பல்லுயிர்க்கும் பாத்தூற்றுப் பாங்கறிதல்
வெற்வேறில் வேந்தர்க்கு இனிது. 

விளக்கம்: 

பெருமை மிக்க ஒரு அரசனைப் பொறுத்தவரை.. 

ஒற்றன் மூலம் வரும் தகவலை வேறு ஒரு ஒற்றன் மூலம் சரி பார்த்துக் கொள்வது இனிது. 
வந்த தகவல் முழுமையானது தானா என்று ஆராய்ந்த பின் நடவடிக்கை எடுப்பது இனிது. 
எல்லா உயிர்களையும் சமமாகப் பாவித்து  ஆட்சி செய்தல் இனிது.

இனியவை நாற்பது.36

அவ்வித் தழுக்கா றுரையாமை முன்இனிதே
செவ்வியனாய்ச் செற்றுச் சினங்கடிந்து வாழ்வினிதே
கவ்வித்தாங் கொண்டுதாங் கண்டது காமுற்று
வவ்வார் விடுதல் இனிது. 

விளக்கம்:

பொறாமைச் சொற்களைப் பேசாமல்  இருப்பது இனிது.  
சினத்தை விடுத்து வாழ்வது இனிது. 
பார்க்கும்  பொருளை பிறரிடமிருந்து கவர நினைக்காமல் அதனை மறந்து விடுவது இனிது.

(தொடரும்)

 


Post a Comment

0 Comments