Ticker

6/recent/ticker-posts

இணையவழி நிதி மோசடி: வெளிநாட்டவர்கள் 19 பேர் கைது


கணினிகள் மற்றும் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தி இணையம் ஊடாக நிதி மோசடிகளில் ஈடுபட்டு வந்த 18 சீன தேசியவாதிகள் மற்றும் பெரு (Peru) நாட்டுப் பெண் ஒருவர் கொம்பனித்தெரு பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து ஆப்பிள் (Apple) ரக கையடக்க தொலைபேசிகள் 399, மடிக்கணினிகள் (Laptop) 14, மேசை கணினிகள் (Desktop) 02, பணம் 473,870 ரூபாய், வரி விலக்கு அளிக்கப்பட்ட வெளிநாட்டு புகையிரதங்கள் 600 என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

வெளிநாட்டவர்கள் குழுவொன்று சந்தேகத்திற்கிடமான முறையில் விடுதியில் தங்கியிருப்பதாக கொம்பனித்தெரு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கபில விஜேமான்னவிற்கு கிடைத்த ரகசியத் தகவலையடுத்து இந்தச் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது. குறித்த விடுதியின் 11-வது மாடியில் உள்ள 5 அறைகளிலும், 12-வது மாடியில் உள்ள 2 அறைகளிலும் தங்கியிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின்படி, கைது செய்யப்பட்ட நபர்களிடம் இலங்கையில் தங்கியிருப்பதற்கான செல்லுபடியாகும் கடவுச்சீட்டோ (Passport) அல்லது விசா (Visa) அனுமதிப்பத்திரமோ இல்லையெனக் கண்டறியப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் அனைவரும் 25 முதல் 37 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

tamilmirror


 


Post a Comment

0 Comments